»   »  ஆஷிமாவின் அம்மாடியோவ் கண்டிஷன்!

ஆஷிமாவின் அம்மாடியோவ் கண்டிஷன்!

Subscribe to Oneindia Tamil

இன்னும் ஒரு படத்தில் கூட நடித்து முடிக்கவில்லை. அதற்குள் "குண்டக்க மண்டக்க கண்டிஷன் போட்டு தயாரிப்பாளர்களை கும்பி கலங்க வைக்கிறாராம் ஆஷிமா.

ஆஷிமா யாருன்னு தெரியும்ல? "நானாக நானில்லை படத்தில் நடித்து வருகிறார் அம்மணி. மும்பைக் குட்டியான ஆஷிமா, வந்த புதிதில் நல்ல புள்ளயாத்தான்இருந்தார். ஆனால் இப்போது அல்டாப் ஆறுமுகியாக மாறி விட்டார்.

முதல் படத்தில், தனது கவர்ச்சியை பெரிய அளவில் முதலீடு செய்துள்ள ஆஷிமாவுக்கு இன்னொரு பட வாய்ப்பு வந்துள்ளது. அவ்வளவு தான் அம்மணிக்கு அடிவயிற்றிலிருந்து ஒரு கர்வம் தலைக்கேறிவிட்டது.

உங்க படத்துல நடிக்க நான் ரெடி. ஆனால் சில கண்டிஷன்கள் இருக்கு. கேட்டுட்டு சொல்லுங்கோ என்று தன்னைத் தேடி வந்த ஒரு தயாரிப்பாளரிடம் பீடிகைபோட்டுள்ளார் ஆஷி.

என்ன கேக்கப் போறாரோ என்று பீதியடைந்த அந்த அப்பாவித் தயாரிப்பாளர், ஆஷிமா ஒவ்வொன்றாக தனது கண்டிஷன்களை சொல்லத் தொடங்கியதும்,விளக்கெண்ணை குடித்தது போல ஆகி விட்டாராம்.

மும்பையிலிருந்து சென்னைக்கு வந்து போக (அப்பா, அம்மாவுடன்) விமான டிக்கெட் எடுத்து கொடுத்து விட வேண்டும். சிட்டியிலேயே சூப்பர் ஸ்டார் ஹோட்டலில்தான் தங்குவேன். சாப்பாடு எனது விருப்பத்திற்கேற்ப தான் இருக்க வேண்டும்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏசி கேரவன் கண்டிப்பாக வேண்டும் என்று வரிசையாக அடுக்கித் தள்ளியிருக்கிறாராம் ஆஷிமா.

"இது என்னடா வம்பாப் போச்சு, நடிச்சு ஒரு படம் கூட இன்னும் வரலை. ஏதோ பார்க்க நல்லாயிருக்காரேன்னு வந்தா இப்படி ஒரேயடியாக போடுறாரே என்று பயந்துபோன தயாரிப்பாளர், "போய் சொல்றேன் என்று கூறி விட்டு ஓட்டம் பிடித்தாராம். அதற்குப் பிறகு ஆஷிமா இருந்த திசை பக்கமே அவர் எட்டிப் பார்க்கவில்லையாம்.

ஆஷிமா, இப்பவே த்ரிஷா ரேஞ்சுக்கு பந்தா பண்ண ஆரம்பிச்சா அவரது கதை அம்புட்டுதேன் என்று கோலிவுட்காரர்கள் கூறுகிறார்கள்.

Read more about: ashima torture producers

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil