யுவர் ஹானர் விஜய்காந்தின் சுதேசி அரசியலுக்கு வரப் போகும் விஜய்காந்த் தனது மச்சான் சுதீஷை தயாரிப்பாளராகப் போட்டு தனது கேப்டன் சினி கிரியேசன்சின்சார்பில் சொந்த காசில் தயாரிக்கும் படம் சுதேசி.இதில் தனது அரசியல் கொள்கைகளை கூவிக் கூவி (ஸாரி, பேசிப் பேசி) நடிக்கப் போகிறாராம்.சும்மாவே சினிமாவில் ரொம்ப பேசுபவர் விஜய்காந்த். காஷ்மீர் தீவிரவாதியாகட்டும், மரத்தடி பஞ்சாயத்து ஆகட்டும், போலீஸ்ஸ்டேசனாகட்டும், நீதிமன்றமாகட்டும் (இங்கு யுவர் ஹானர் என்று ஆரம்பித்து...) 2 ரீலுக்கு குரலை எட்டு கட்டைக்கும் 3கட்டைக்கும் மாற்றி மாற்றி, விடாமல் மூச்சு முட்ட பேசிவிட்டுத் தான் சொல்ல வந்த பாயிண்டுக்கே வருவார்.வில்லனை சுட்டோ, வெட்டியோ கொல்வதற்கு முன் பேசியே அவனை கொத்து போட்டுவிடுவார். இப்படிப்பட்ட விஜய்காந்த்தனது சொந்த காசில் தனது அரசியல் கொள்கைகளை எடுத்துச் சொல்ல படம் எடுத்தால் எம்புட்டு பேசுவார் என்பதை நீங்களேகற்பனை செய்து கொள்ளலாம்.அரசியலுக்கு முந்தைய விஜய்காந்தின் கடைசி படமாக இது இருக்கும் என்பதால் பக்கா ஆக்ஷன், அரசியல், கவர்ச்சி எனஎல்லாவற்றையும் கலந்து கரம் மசாலாவாக தரப் போகிறார்களாம்.ஒரு வில்லன் எல்லாம் நம்ம கேப்டனுக்கு பத்தாது என்பதால் இதில் ஷாயாஜி ஷிண்டே (பாரதியாராக நடித்தவர்), மனோஜ் கே.ஜெயின் (நடிகை ஊர்வசியின் வீட்டுக்காரர்), பிரதீப் ராவத் (லகான் இந்திப் படத்தில் நடித்தவர்) ஆகியோர் வில்லன்களாகவருகிறார்கள்.விஜய்காந்த் படம் என்றாலே பிலிம் ரோல் வாங்கிய கையோடு மன்சூர் அலி கானின் கால்ஷீட்டையும் வாங்கிவிடுவது வழக்கம்.இதனால் இன்னொரு வில்லனோ வில்லனாக மன்சூர் வருகிறார்.இவர்கள் தவிர நான் ஷொன்னா ஷொன்னது டான் என்று அழகாக தமிழ் பேசும் மாஜி வில்லன் எம்.என். நம்பியார்,தலைவாசல் விஜய், கருணாஸ், மயில்சாமி ஆகியோரும் நடிக்கிறார்கள்.இவ்வளவு சொல்கிறீர்களே. படத்தில் ஹீரோயினே இல்லையா என்கிறீர்களா?. கேப்டன் படத்தில் ஹீரோயினுக்கு என்ன வேலை.பாட்டுக்கு டான்ஸ் ஆடுவது, அப்புறம் வில்லனால் கொல்லப்படுவது. இதானே.இதற்காகவே இந்தப் படத்தில் ஹீரோயினாக வருகிறார் ஆஷிமா. ஆலாவுதீன் படத்தின் பிரபுதேவாவுடன் அருவியில் விழுந்துவிழுந்து குளித்தாரே அவரே தான் இவர். ரமணாவிலும் விஜய்காந்தின் நல்ல மனசைப் பார்த்து வியக்கும் பெண்ணாகநடித்திருக்கிறார்.இதில் கேப்டனுக்கு ஜோடியாக நடிக்கிறார். கண்டாங்கி சேலையில் விஜய்காந்துடன் டான்ஸ் ஆடிப் பாடி நடித்துக்கொண்டிருக்கிறார். இவர் தவிர சங்கீதாவும் இருக்கிறார். புதுமுகமாக ஸ்ருதி மல்ஹோத்ரா என்ற பெண்ணையும்அறிமுகப்படுத்துகிறார்கள்.படம் தீபாவளிக்கு வெளியாகப் போகிறது. மும்பை, டெல்லி என நாட்டின் பல பகுதிகளிலும் சூட்டிங் நடக்கிறது.படத்தை இயக்குவது ஜே.பி.ஏ.ஒய். என்ற புதிய இயக்குனர். பெயரைக் கேட்டால் இனிஷியலோடு நிறுத்திக் கொள்கிறார் இந்தஜே.பி.ஏ.ஒய். எப்படியெல்லாம் வித்தியாசம் காட்றாங்கப்பா.இவ்வளவு தகவல்களைத் தந்தாலும், ஆஷிமா பத்தி ஏதாவது பின்னணி விஷேச சமாஜாரத்தை தந்தால் தானே நம்ம மனசுஆறும்.இந்தப் படத்தில் புக் ஆவதற்கு முன் நானாக நானில்லை என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஆஷிமா. இந்தப் படத்தின்சூட்டிங் சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள கோவில் ஒன்றில் நடந்ததாம்.கொஞ்சமே கொஞ்சமாக உடை அணிந்து கலர்ஃபுல் கவர்ச்சி ஆட்டம் போடும் காட்சியில் ஆஷிமா நடிக்க இருந்தார். கதைப்படிகோவில்களில் பாடல் காட்சியை படமாக்க வேண்டியிருந்ததாம். ஆனால் தமிழக கோவில்களில் படப்பிடிப்பு நடத்ததடையுள்ளதால், இங்கேயிருந்து உத்தரப் பிரதேசத்துக்கு படப்பிடிப்புக் குழுவினர் சென்றுள்ளனர்.அங்குள்ள ஒரு கோவிலில் ஷூட்டிங் நடத்தியுள்ளார்கள். அப்போது ஆஷிமா போட்டிருந்த டிரஸ்சும் காட்டிய கிளாமரும்கோவிலுக்கு நூற்றுக்கணக்கானவர்களை சுண்டி இழுத்துவிட்டதாம்.வந்த கூட்டம் ஆஷிமாவை ரசித்து கும்மாளம் போட, சாமி கும்பிட வந்த பக்தர்கள் எரிச்சலாகி கோவில் நிர்வாகிகளைசட்டையைப் பிடித்து இழுத்து படப்பிடிப்பை நிறுத்த வைத்தார்களாம்.ஆ.. (ஷி)சி.. ங்கம் மா...

By Staff

அரசியலுக்கு வரப் போகும் விஜய்காந்த் தனது மச்சான் சுதீஷை தயாரிப்பாளராகப் போட்டு தனது கேப்டன் சினி கிரியேசன்சின்சார்பில் சொந்த காசில் தயாரிக்கும் படம் சுதேசி.

இதில் தனது அரசியல் கொள்கைகளை கூவிக் கூவி (ஸாரி, பேசிப் பேசி) நடிக்கப் போகிறாராம்.

சும்மாவே சினிமாவில் ரொம்ப பேசுபவர் விஜய்காந்த். காஷ்மீர் தீவிரவாதியாகட்டும், மரத்தடி பஞ்சாயத்து ஆகட்டும், போலீஸ்ஸ்டேசனாகட்டும், நீதிமன்றமாகட்டும் (இங்கு யுவர் ஹானர் என்று ஆரம்பித்து...) 2 ரீலுக்கு குரலை எட்டு கட்டைக்கும் 3கட்டைக்கும் மாற்றி மாற்றி, விடாமல் மூச்சு முட்ட பேசிவிட்டுத் தான் சொல்ல வந்த பாயிண்டுக்கே வருவார்.

வில்லனை சுட்டோ, வெட்டியோ கொல்வதற்கு முன் பேசியே அவனை கொத்து போட்டுவிடுவார். இப்படிப்பட்ட விஜய்காந்த்தனது சொந்த காசில் தனது அரசியல் கொள்கைகளை எடுத்துச் சொல்ல படம் எடுத்தால் எம்புட்டு பேசுவார் என்பதை நீங்களேகற்பனை செய்து கொள்ளலாம்.

அரசியலுக்கு முந்தைய விஜய்காந்தின் கடைசி படமாக இது இருக்கும் என்பதால் பக்கா ஆக்ஷன், அரசியல், கவர்ச்சி எனஎல்லாவற்றையும் கலந்து கரம் மசாலாவாக தரப் போகிறார்களாம்.


ஒரு வில்லன் எல்லாம் நம்ம கேப்டனுக்கு பத்தாது என்பதால் இதில் ஷாயாஜி ஷிண்டே (பாரதியாராக நடித்தவர்), மனோஜ் கே.ஜெயின் (நடிகை ஊர்வசியின் வீட்டுக்காரர்), பிரதீப் ராவத் (லகான் இந்திப் படத்தில் நடித்தவர்) ஆகியோர் வில்லன்களாகவருகிறார்கள்.

விஜய்காந்த் படம் என்றாலே பிலிம் ரோல் வாங்கிய கையோடு மன்சூர் அலி கானின் கால்ஷீட்டையும் வாங்கிவிடுவது வழக்கம்.இதனால் இன்னொரு வில்லனோ வில்லனாக மன்சூர் வருகிறார்.

இவர்கள் தவிர நான் ஷொன்னா ஷொன்னது டான் என்று அழகாக தமிழ் பேசும் மாஜி வில்லன் எம்.என். நம்பியார்,தலைவாசல் விஜய், கருணாஸ், மயில்சாமி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இவ்வளவு சொல்கிறீர்களே. படத்தில் ஹீரோயினே இல்லையா என்கிறீர்களா?. கேப்டன் படத்தில் ஹீரோயினுக்கு என்ன வேலை.பாட்டுக்கு டான்ஸ் ஆடுவது, அப்புறம் வில்லனால் கொல்லப்படுவது. இதானே.

இதற்காகவே இந்தப் படத்தில் ஹீரோயினாக வருகிறார் ஆஷிமா. ஆலாவுதீன் படத்தின் பிரபுதேவாவுடன் அருவியில் விழுந்துவிழுந்து குளித்தாரே அவரே தான் இவர். ரமணாவிலும் விஜய்காந்தின் நல்ல மனசைப் பார்த்து வியக்கும் பெண்ணாகநடித்திருக்கிறார்.

இதில் கேப்டனுக்கு ஜோடியாக நடிக்கிறார். கண்டாங்கி சேலையில் விஜய்காந்துடன் டான்ஸ் ஆடிப் பாடி நடித்துக்கொண்டிருக்கிறார். இவர் தவிர சங்கீதாவும் இருக்கிறார். புதுமுகமாக ஸ்ருதி மல்ஹோத்ரா என்ற பெண்ணையும்அறிமுகப்படுத்துகிறார்கள்.


படம் தீபாவளிக்கு வெளியாகப் போகிறது. மும்பை, டெல்லி என நாட்டின் பல பகுதிகளிலும் சூட்டிங் நடக்கிறது.

படத்தை இயக்குவது ஜே.பி.ஏ.ஒய். என்ற புதிய இயக்குனர். பெயரைக் கேட்டால் இனிஷியலோடு நிறுத்திக் கொள்கிறார் இந்தஜே.பி.ஏ.ஒய். எப்படியெல்லாம் வித்தியாசம் காட்றாங்கப்பா.

இவ்வளவு தகவல்களைத் தந்தாலும், ஆஷிமா பத்தி ஏதாவது பின்னணி விஷேச சமாஜாரத்தை தந்தால் தானே நம்ம மனசுஆறும்.

இந்தப் படத்தில் புக் ஆவதற்கு முன் நானாக நானில்லை என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஆஷிமா. இந்தப் படத்தின்சூட்டிங் சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள கோவில் ஒன்றில் நடந்ததாம்.

கொஞ்சமே கொஞ்சமாக உடை அணிந்து கலர்ஃபுல் கவர்ச்சி ஆட்டம் போடும் காட்சியில் ஆஷிமா நடிக்க இருந்தார். கதைப்படிகோவில்களில் பாடல் காட்சியை படமாக்க வேண்டியிருந்ததாம். ஆனால் தமிழக கோவில்களில் படப்பிடிப்பு நடத்ததடையுள்ளதால், இங்கேயிருந்து உத்தரப் பிரதேசத்துக்கு படப்பிடிப்புக் குழுவினர் சென்றுள்ளனர்.

அங்குள்ள ஒரு கோவிலில் ஷூட்டிங் நடத்தியுள்ளார்கள். அப்போது ஆஷிமா போட்டிருந்த டிரஸ்சும் காட்டிய கிளாமரும்கோவிலுக்கு நூற்றுக்கணக்கானவர்களை சுண்டி இழுத்துவிட்டதாம்.

வந்த கூட்டம் ஆஷிமாவை ரசித்து கும்மாளம் போட, சாமி கும்பிட வந்த பக்தர்கள் எரிச்சலாகி கோவில் நிர்வாகிகளைசட்டையைப் பிடித்து இழுத்து படப்பிடிப்பை நிறுத்த வைத்தார்களாம்.

ஆ.. (ஷி)சி.. ங்கம் மா...

Read more about: vijaykanths next film sudesi
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X