கிளாமர் யோகா.. அசோக் செல்வன் மனைவியும் நடிகையுமான கீர்த்தி பாண்டியன் வெளியிட்ட செம ஸ்டில்!
சென்னை: நடிகை கீர்த்தி பாண்டியன் அசோக் செல்வனை திருமணம் செய்துக் கொண்ட பின்னர் நீச்சல் உடையில் படுகவர்ச்சியாக யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி ட்ரீட் கொடுத்திருக்கிறார்.
திருமணத்துக்கு முன்பாக இலங்கையில் டூர் அடித்த போது பிகினி உடையில் படு போல்டாக போஸ் கொடுத்து இணையத்தை சூடாக்கியவர் கீர்த்தி பாண்டியன். அன்பிற்கினியாள் மற்றும் கண்ணகி படங்களில் நடித்த அவர் திருமணத்துக்குப் பிறகும் நடிப்பேன் எனக் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு அசோக் செல்வனுடன் அவர் நடித்த ப்ளூ ஸ்டார் படம் வெளியான நிலையில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கவர்ச்சியாக யோகா செய்யும் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.
அசோக் செல்வனுடன் திருமணம்: சூது கவ்வும் படத்தில் விஜய்சேதுபதி உடன் இணைந்து நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அசோக் செல்வன். பீட்ஸா 2, தெகிடி படங்களில் ஹீரோவாக மாறிய அசோக் செல்வன் ஓ மை கடவுளே, தீனி, போர் தொழில் உள்ளிட்ட படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கு ஏற்ற மாதிரியான நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து தமிழ் ரசிகர்கள் மனங்களில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். கடந்த ஆண்டு நடிகை கீர்த்தி பாண்டியனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

அருண் பாண்டியன் மகள்: தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நடிகர் அருண் பாண்டியனின் மகள் தான் கீர்த்தி பாண்டியன் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். அருண் பாண்டியனுக்கு கவிதா பாண்டியன், கிரணா பாண்டியன் மற்றும் கீர்த்தி பாண்டியன் என மூன்று மகள்கள் உள்ளனர். இதில், ஏற்கனவே கவிதா பாண்டியன் மற்றும் கிரணா பாண்டியனுக்குத் திருமணம் ஆன நிலையில், கீர்த்தி பாண்டியனைத் தான் அசோக் செல்வன் திருமணம் செய்துக் கொண்டார்.

சினிமாவில் கீர்த்தி பாண்டியன்: மலையாளத்தில் வெளியான ஹெலன் படத்தின் தமிழ் ரீமேக்கான அன்பிற்கினியாள் படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி பாண்டியன் தும்பா, கண்ணகி படத்தில் நடித்த நிலையில், தனது கணவர் அசோக் செல்வன் உடன் இணைந்து ப்ளூ ஸ்டார் படத்திலும் நடித்துள்ளார். அந்த படத்தில் உருவான காதல் தான் இருவரும் திருமணம் செய்துக் கொள்ள வழி வகை செய்தது. இந்த ஆண்டு வெளியான அந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அடுத்து கொஞ்சி பேசினால் என்ன என்கிற படத்திலும் இவர் நடித்துள்ளார்.

கவர்ச்சி யோகா: யோகா தினம் என்றாலே நடிகர்களை பின்னுக்குத் தள்ளி விட்டு ஏகப்பட்ட நடிகைகள் படு கவர்ச்சியான உடைகளை அணிந்துக் கொண்டு இன்ஸ்டாகிராமில் மேலும், ரசிகர்களை தேற்றலாம் என்கிற கணிப்புடன் கவர்ச்சி யோகா போட்டோக்களை வெளியிட்டு வருகின்றனர். கீர்த்தி பாண்டியனும் திருமணத்துக்குப் பிறகு டூ பீஸ் உடையுடன் யோகா செய்துள்ள போட்டோவை வெளியிட்டுள்ளார். திருமணம் ஆன நிலையில், கொஞ்சம் சில்லவுட்டாக வெளியிட்டுள்ளாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











