ஹீரோயின் கங்கனாவை கட்டிப்பிடிக்கணும்.. இதற்காகவே 'தலைவி' செட்டுக்கு திடீர் விசிட் அடித்த இயக்குனர்!
மும்பை: கங்கனாவின் தலைவி பட ஷூட்டிங்கிற்கு இந்தி பட இயக்குனர் திடீர் விசிட் அடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையான 'தலைவி'யில் நடித்து வருகிறார் பிரபல இந்தி நடிகை கங்கனா ரனவத்.
படத்தை ஏ.எல்.விஜய் இயக்குகிறார். அரவிந்த்சாமி, பிரகாஷ்ராஜ், பிரியாமணி உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங் சென்னையில் நடந்து வருகிறது.

அஸ்வினி ஐயர்
சினிமாவுக்கு வந்த குறுகிய காலத்திலேயே, தனு வெட்ஸ் மனு, ஃபேஷன், குயின் ஆகிய படங்களில் சிறப்பாக நடித்ததற்காக மூன்று தேசிய விருதுகளை பெற்றவர் கங்கனா. சமீபத்தில் இவர் நடித்த பங்கா என்ற இந்திப் படம் ரிலீஸ் ஆகியுள்ளது. இதை அம்மா கணக்கு படத்தை இயக்கிய அஸ்வினி ஐயர் இயக்கியுள்ளார்.

வாய்ப்புக் கிடைத்தால்
இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுபற்றிய பேசிய இயக்குனரிடம் சமீபத்தில் கங்கனாவின் பயோபிக் பற்றி கேட்கப்பட்டது. கங்கனாவுக்கு அவர் கதையை அவரே படமாக இயக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். இருந்தாலும் எனக்கு வாய்ப்புக் கிடைத்தால் இயக்குவேன் என்று கூறியிருந்தார்.

மரியாதை இருக்கிறது
அதோடு, அவர் மீது எனக்கு மரியாதை இருக்கிறது. மனிதாபிமான அடிப்படையில் பல நல்ல விஷயங்களை அவர் செய்து வருகிறார். அதுபற்றி யாருக்கும் தெரியாது. அவரும் நானும் ஒரு விஷயங்களில் ஒன்றாக இருக்கிறோம். உலகம் என்ன நினைக்கிறது என்பதை நாங்கள் பொருட்படுத்தவில்லை என்றும் கூறியிருந்தார்.
Recommended Video
நடன காட்சி
இந்நிலையில் சென்னையில் நடக்கும் தலைவி படப்பிடிப்புக்கு திடீர் விசிட் அடித்தார் இயக்குனர் அஸ்வினி ஐயர். படப்பிடிப்பில் நடன காட்சியில் நடித்துக் கொண்டிருந்த நடிகை கங்கனா ரனவத்தை, இடைவேளையில் சந்தித்து பேசினார். பின்னர் அந்தப் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அஸ்வினி ஐயர்.

கட்டி அணைக்க
அதில், கடின உழைப்பாளியான, திறமையான கங்கனாவைக் கட்டி அணைக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக சென்னைக்குத் திடீர் விசிட் அடித்தேன். தலைவி படப்பிடிப்பில் அவரைப் பார்த்தேன். படம் பற்றியும் இருவரும் பேசிக்கொண்டிருந்தோம் என்று கூறியுள்ளார். இந்த போட்டோ வைரலாகி வருகிறது. ஏராளமான ரசிகர்கள் இதை லைக் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











