»   »  ஆசினுக்கு ஆப்பு வைத்த ஜோ!

ஆசினுக்கு ஆப்பு வைத்த ஜோ!

Subscribe to Oneindia Tamil

கெளதம் மேனனின் வாரணம் ஆயிரம் படத்தில் முதலில் ஆசின்தான் நடிப்பதாகஇருந்தது. ஆனால் ஜோதிகா போட்ட போட்டால் ஆசினை வேண்டாம் என்று விட்டுவிட்டார்களாம்.

சூர்யா, ஆண்ட்ரியா ஜோடியில் கெளதம் மேனனின் இயக்கத்தில் உருவாகும்படம்தான் வாரணம் ஆயிரம். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியை அவரதுமனைவிதான் ரெக்கமண்ட் செய்தாராம்.

முதலில் சூர்யாவுக்கு ஜோடியாக ஆசினைப் போடலாம் என கெளதம்நினைத்திருந்தார். இதை சூர்யாவிடமும் சொல்லியுள்ளார். ஆசினும், கெளதமிடம்துண்டைப் போட்டு வைத்திருந்தார்.

சூர்யா ஆசினின் முயற்சி மற்றும் கெளதமின் விருப்பத்தை மனைவி ஜோதிகாவிடம்கூறி ஆலோசனை கேட்டாராம். ஆசினுடன் கண்டிப்பாக நீங்கள் நடிக்கவே கூடாது,கூடவே கூடாது என்று தலையை கிழக்கும், மேற்குமாக ஆட்டி நிராகரித்து விட்டாராம்ஜோதிகா.

இதனால் குழம்பிப் போன சூர்யா, கெளதமிடம் இதை சொல்லியுள்ளார்.ஏமாற்றமடைந்த கெளதம், சரி பரவாயில்லை வேறு ஹீரோயினைப் பார்த்துக்கொள்ளலாம் என்று சூர்யாவிடம் கூறி விட்டு, பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் என்றுஆசினிடம் தயங்கிபடி கூறினாராம். கடுப்பான ஆசின், பார்க்கலாம், பார்க்கலாம் எனகூறி ஒதுங்கிக் கொண்டாராம்.

அதன் பிறகு ஜோதிகாவே, ஆண்ட்ரியாவை ரெக்கமண்ட் செய்தாராம். இதையடுத்தேசூர்யாவுடன், ஜோடி சேர்ந்தார் ஆண்ட்ரியா. கெளதமின் படமான பச்சைக்கிளிமுத்துச்சரம் படத்தில் சரத்குமாருடன் 2வது ஜோடியாக நடித்திருப்பவர்தான்ஆண்ட்ரியா. முதல் ஜோடியாக வருபவர் ஜோதிகா.

இப்படத்தின் ஷூட்டிங்கின்போது ஆண்ட்ரியாவின் நடிப்பும், பழக்க வழக்கங்களும்ஜோ.வுக்குப் பிடித்துப் போனதால் தனது கணவரின் ஜோடியாக தேர்வு செய்தாராம்.

ஆண்ட்ரியாவை கெளதமுக்கும் பிடிக்கும் என்பதால் பிரச்சினை இல்லாமல் ஜோடிதேடல் முடிந்ததாம்.

ஜோதிகா ஏன் இப்படி தன் மீது கடுமையாக இருக்கிறார் என்று புரியாமல் ஆசின்அணல் பறக்க யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.

நெருப்பு இல்லாமல் புகையுமோ?

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil