»   »  சிரஞ்சீவியுடன் ஆசின்!

சிரஞ்சீவியுடன் ஆசின்!

Subscribe to Oneindia Tamil

தமிழில் படு பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் ஆசின், அந்த நெருக்கடிக்குமத்தியிலும் ஒரு தெலுங்குப் படத்துக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். காரணம் ஹீரோசிரஞ்சீவி.

சஞ்சய் தத்தின் கலக்கல் நடிப்பில் வெளியான முன்னாபாய் எம்.பி.பி.எஸ். தமிழில்வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். என்ற பெயரில் கமல் நடிக்க வெளியானது. இதேபோலதெலுங்கில் சங்கர்தாதா எம்.பி.பி.எஸ் என்ற பெயரில் சிரஞ்சீவி நடிப்பிலும்,கன்னடத்தில் உப்பிதாதா எம்.பி.பி.எஸ். என்ற பெயரில் உபேந்திரா நடிப்பிலும்வெளியானது.

முன்னாபாய் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து அதன் 2ம் பாகத்தை லகேரஹோமுன்னாபாய் என்ற பெயரில் வெளியிட்டனர். இதுவும் மாபெரும் வெற்றியைப்பெற்றது.

இதைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் இப்போது தமிழ், தெலுங்கு, கன்னடத்துக்குக்கொண்டு வருகின்றனர். தெலுங்கில் சிரஞ்சீவியே இப்படத்திலும் நடிக்கிறார்.அவருக்கு ஜோடியாக வித்யா பாலனைக் கேட்டனர். இவர்தான் ஒரிஜினல் லகேரஹோமுன்னாபாய் படத்தில் ஹீரோயினாக நடித்தவர்.

ஆனால் இப்போதெல்லாம் இந்திக்குத்தான் வித்யா முன்னுரிமை கொடுப்பதால்தெலுங்கு வாய்ப்பை நிராகரித்து விட்டார். இதையடுத்து ஆசினை கேட்டுள்ளனர்.

ஆசினுக்கோ பரம சந்தோஷமாகி விட்டதாம். தமிழில் கை நிறையப் படங்களுடன்படு பிசியாக இருந்தபோதிலும் இப்படத்தில் நடிக்க ஓ.கே. சொல்லி விட்டாராம்.

படத்துக்கு சங்கர்தாதா சுக்கிந்தாபாத் என்று பெயர் வைத்துள்ளனராம். படத்தின்தயாரிப்பாளர், ஹீரோ, ஹீரோயின் எல்லாம் ரெடியாகி விட்டனர். ஆனால் இன்னும்இயக்குநரை முடிவு செய்யவில்லை. அனேகமாக பிரபு தேவா இயக்குவார் என்றுகூறப்படுகிறது.

ஆசின் பற்றி ஒரு விளையாட்டு நியூஸ். சின்ன வயசிலிருந்தே ஆசினுக்குகேம்ஸுன்னா ரொம்பப் பிடிக்குமாம். அவுட்டோர் கேம்ஸ் மட்டுமல்லாது இண்டோர்கேம்ஸிலும் அவர் கில்லாடியாம். ஏகப்பட்ட கோப்பைகளையும், பரிசுகளையும்வாங்கிக் குவித்துள்ளாராம்.

ஆசினை, அவருடன் படித்த தோழிகள், செல்லமாக விளையாட்டு வண்ணத்துப் பூச்சிஎன்றுதான் கூப்பிடுவார்களாம்.

அழகு, அழகு!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil