»   »  இந்தி கஜினியில் அசின்?

இந்தி கஜினியில் அசின்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கஜினியின் இந்தி ரீமேக்கிலும் அசினே நடிப்பார் எனத் தெரிகிறது. மற்ற நடிகைகள் யாரும் இயக்குநர் முருதாஸுக்குத் திருப்தி தராததால், பேசாமல்அசினையே நடிக்க வைத்து விடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார்களாம்.

கஜினியில் சூர்யாவைப் போலவே கலக்கலான நடிப்பைத் தந்தவர் அசின். அதற்கு முன்பு வரை அழகு பொம்மையாக வந்து போய்க் கொண்டிருந்தஅசின், இப்படத்தின் மூலம் தனக்கு நன்றாக நடிக்கவும் தெரியும் என்பதை நிரூபித்தார்.

கஜினியின் வெற்றி வடக்கேயும் பரவி ஆமிர்கான், முருகதாஸைக் கூப்பிட்டு இந்தப் படத்தை என்னை வைத்து நீங்கள்தான் ரீமேக் செய்ய வேண்டும்என்று அன்புக் கட்டளையிட்டார். தட்டாத முருகதாஸும், ஓ.கே. சொல்லி விட்டார்.

தெலுங்கில் சிரஞ்சீவியை வைத்து ஸ்டாலினை இயக்கிய முருகதாஸ் அந்தப் படம் முடிந்ததைத் தொடர்ந்து இப்போது இந்தி கஜினிக்கு மாறியுள்ளார்.

இப்படத்திலும் அசினே நடிப்பார் என்று முதலில் கூறப்பட்டது. ஆயிஷா டாக்கியா, பிரியங்கா சோப்ரா, சுஷ்மிதா சென் என பலரையும்பரிசீலித்தனர். ஆயிஷா டாக்கியா. ஓ.கே. ஆகி விட்டார் என்று கூறப்பட்டது.

இதனால் அசின் அப்செட் ஆகியிருந்தார். இந்த நிலையில் யாரும் சரிப்பட்டு வரவில்லையாம் முருகதாஸுக்கு. அதேநிலைதான் ஆமீருக்கும்.

இதனால் வேறு நடிகைகளைப் பார்ப்பதற்குப் பேசாமல் அசினையை புக் பண்ணி விடலாம் என்ற முடிவுக்கு முருகதாஸ் வந்து விட்டாராம். அதைஆமிர்கானும் ஏற்றுக் கொண்டுள்ளாராம்.

எனவே இந்தி கஜினியிலும் அசினே நடிப்பார் என்று கூறப்படுகிறது. இந்திப் படத்திற்கும் கஜினி என்றே பெயர் சூட்ட ஆமிர்கான் விருப்பம்தெரிவித்துள்ளாராம்.

தமிழில் இசையமைத்த ஹாரிஸ் ஜெயராஜ் இந்தியில் இசையமைக்கவில்லை. ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசையை இப்படத்திற்கு வழங்கவுள்ளார்.வருகிற 23ம் தேதி படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.

வெல்லட்டும்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil