»   »  அசினை கைவிட்ட முருகதாஸ்

அசினை கைவிட்ட முருகதாஸ்

Subscribe to Oneindia Tamil

தமிழையும், தெலுங்கையும் ஒரு கை பார்த்த அசின் அடுத்த கன்னடத்திற்குத் தாவுகிறார்.

முதல் முறையாக கன்னடப் படம் ஒன்றில் நடிக்க புக் ஆகியுள்ளார். படத்தின் பெயர் நம்பர் 73, சாந்தி நிவாஸ்.தமிழ்ப் படங்களை ரீமேக் செய்து அல்வா போல மார்க்கெட்டை பளபளவென வைத்திருக்கும் சுதீப்தான்இப்படத்தின் நாயகன். அவரோட தோப்பனார்தான் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

இப்படத்தில் மொத்தம் மூன்று நாயகிகள். அவர்களில் அசின் முக்கிய வேடத்தில் வருகிறார். அட்டகாசமானபாடல் காட்சியும் அசினுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாம். அசினைத் தவிர திதி தீபு, அடஅட அனு பிரபாகர்ஆகியோரும் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள்.

அனுபிரபாகருக்கு குத்து விளக்கு வேடம். தீபுவுக்கு கவர்ச்சி ஏரியாவை ஒதுக்கியுள்ளனர். அசினுக்கு அல்ட்ராமாடர்ன் கேர்ள் வேடமாம். இப்படத்தின் வெற்றியைப் பொறுத்து, தொடர்ந்து கன்னடத்தில் நடிப்பதா,வேண்டாமா என்பதை முடிவு செய்யவிருக்கிறாராம் அசின்.

அஜீத்துடன் நடித்த வரலாறு வசூலில் பின்னி எடுத்துக் கொண்டிருப்பதால் அசினுக்கு ரொம்ப சந்தோஷமாம்.அப்படத்தில் அசினுக்கு கிளாமர் சைடு சூப்பராக வந்திருப்பதாக நிறைய பேச்சு கிளம்பியிருப்பதால் இனிநடிக்கும் படங்களிலும் கிளாமர் சைடை கூட்டிக் கொள்ள திட்டமிட்டுள்ளாராம் அசின்.

கன்னடத்தில் தலையைக் காட்டும் சந்தோஷம் ஒருபக்கம் இருந்தாலும் மறுபக்கம் அசினுக்கு பேராப்புவைத்துள்ளாராம் கஜினி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். கஜினியை இந்திக்கும் கொண்டு போகிறார் முருகதாஸ். இப்படத்திலும் தானே நாயகியாகி, இந்தியிலும் உடல் பொருள் ஆவியை காட்டி இந்தி பீல்டையும் கலக்கிவிடவேண்டும் என்ற பேரெதிபார்ப்புடன் இருந்தார் அசின்.

நாமதான் நாயகி என்றும் படு தெம்பாக இருந்து வந்தார். ஆனால் அவருக்கு பெரிய ஆப்பாக வைத்து விட்டார்முருகதாஸ்.

இந்தியில் உருவாகும் கஜினியில், அசின் கிடையாதாம். அவருக்குப் பதில், பிரியங்காவை சோப்ராவை நடிக்கவைக்க முடிவெடுத்து விட்டாராம் முருகா. அதேபோல சூர்யா கேரக்டரில் அமீர்கான் நடிக்கவில்லை. அனில்குமார் நடிக்கிறாராம். நயனதாரா கேரக்டர் யாருக்கு என்பது மட்டும் இன்னும் முடிவாகவில்லையாம்.

முருகதாஸின் இந்த அதிரடி ஆப்பால் அரண்டு போயுள்ள அசின், கடும் ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளாராம்.தாஸா, ஏன் இப்படிச் செய்தால் ராசா என்று தனக்குத்தானே புலம்பிக் கொண்டுள்ளாராம்.

Read more about: asin to act in kannada

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil