வளைத்து பிடித்த அசின்
தெலுங்கில் சூப்பர் ஹிட் படமான போக்கிரியின் ரீமேக் தமிழில் அதே பெயரில்உருவாகவுள்ளது. இளைய தளபதி விஜய் நடிக்க, நடிகர் பிரபுதேவா படத்தை இயக்கப்போகிறார்.
தெலுங்கில் இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ள பிரபுதேவா, தமிழில்இயக்கப் போகும் முதல் படம் இது.
இந்தப் படத்தில் ஆசின், விஜய்யின் ஹீரோயினாக நடிக்கிறார். ஆனால் முதலில்இப்படத்தில் ஆசின் நடிப்பதாக இல்லை. தெலுங்கு நடிகை ஒருவரை தீவிரமாகமுயற்சித்துக் கொண்டிருந்தார் விஜய். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்துபாவ்னாவை டிரை செய்து பார்த்தும் கிடைக்கவில்லை.
நேரடியாக பிரபு தேவாவை போய்ப் பார்த்த ஆசின், இப்படத்தில் எனக்கே ஹீரோயின்வாய்ப்பு கிடைக்குமாறு செய்ய கோரியுள்ளார். பிரபு தேவாவும், இதற்காகமெனக்கெட்டு விஜய்யிடம் பேசி அவரது சம்மதத்தைப் பெற்றாராம்.
இப்படித்தான் போக்கிரி நாயகியானாராம் அசின்.
விஜய்யும், ஆசினும் சேர்ந்து கொடுத்த சிவகாசி மெகா ஹிட் படமானது. அதேபோலஇப்படம் வெற்றிப்படமாக அமையும் என்று ஆசின் நம்புகிறார்.


Click it and Unblock the Notifications