»   »  அந்தரத்தில் அசின்!

அந்தரத்தில் அசின்!

Subscribe to Oneindia Tamil
விஜயசாந்தியை தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு, அந்தரத்தில் தொங்கியபடி நடித்து அசத்தியுள்ளாராம் அசின்.

சினிமாவில் நடிப்பதைப் போலவே விளம்பரப் படங்களிலும் படு பிசியாக நடித்து வருபவர் அசின். ஏகப்பட்டவிளம்பரங்களில் நடித்திருந்தாலும் சமீபத்தில் நடித்த கோல்கேட் விளம்பரத்தை அசினால் மறக்கவே முடியாதாம்.அந்த அளவுக்கு படு ரிஸ்க் எடுத்து நடித்துள்ளாராம் அசின்.

கோல்கேட் விளம்பரத்தில் நடிக்க உலக அளவில் பல நடிகர், நடிகைகளை தேர்வு செய்துள்ளனர்.இந்தியாவிலிருந்து தேர்வான ஒரே நடிகை அசின்தானாம். இந்த விளம்பரத்தை பாங்காக் நகரில் சுட்டுள்ளார்கள்.

அங்குள்ள மூன் ஸ்டார் ஸ்டுடியோவில் அசின் நடித்த விளம்பரம் படமாக்கப்பட்டது.எப்படி தெரியுமா? கிட்டத்தட்ட 25 அடி உயரத்திலிருந்து அப்படியே குதிப்பது போல காட்சிஅமைத்திருந்தார்கள்.

இதைக் கேட்டதும் முதலில் அசினுக்கு திரில் ஆகி விட்டதாம். இந்தக் காட்சி ரிஸ்க் ஆனதுதான். நீங்களேநடிக்கலாம் அல்லது டூப் போட்டும் எடுக்கலாம் என்று கூறியுள்ளனர்.

ஆனால் சற்றும் யோசிக்காமல், டூப்பே வேண்டாம், நானே நடிக்கிறேன் என்று உற்சாகமாக கூறியுள்ளார் அசின்.இதைக் கேட்டதும் படத்தை இயக்கி ஹாலிவுட் இயக்குநர் ஆயு ஹுயாங் சி அசந்து போய் விட்டாராம்.கண்டிப்பாக உங்களுக்கு கஷ்டமாக இருக்கும், டூப் போடலாம என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால் அசின் பிடிவாதமாக இல்லை, இல்லை நானே நடிக்கிறேன் என்று கூறியுள்ளார்.இதையடுத்து அவரது இடுப்பில் ஒரு கயிற்றை கட்டி மேலே தூக்கியுள்ளனர். அதன் பின்னர் 25 அடிஉயரத்திலிருந்து படு அனாயசமாக குதித்து அசத்தினாராம் அசின்.

படு தத்ரூபமாக, எந்தவித பயம் இல்லாமல் அசின் குதித்து முடித்ததும் கூடியிருந்த அத்தனை பேரும் கைதட்டிபாராட்டித் தள்ளி விட்டார்களாம். அசினுடன், ஜாக்கி ஜானின் ட்ரூப்பில் உள்ள 25 ஸ்டண்ட் மேன்களும் இந்தக்காட்சியில் பங்கேற்றார்களாம்.

இதைச் சொல்லி சொல்லி மகிழ்ந்து வருகிறாராம் அசின். இதை அவர் சொல்லியபோது, கோல்கேட் பற்பசையைத்தேய்க்காமலேயே படு வெள்ளையாக தெரிந்தன அசினின் பச்சரிசிப் பற்கள்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil