»   »  மிஸ் ஆன மிஸ்ஸியம்மா!

மிஸ் ஆன மிஸ்ஸியம்மா!

Subscribe to Oneindia Tamil

மிஸ்ஸியம்மா என்ற படத்தில் நடிக்கவிருந்த அசின், இப்போது அதிலிருந்து கழன்றுகொண்டு விட்டார்.

ஜெமினி, சாவித்ரி நடிப்பில் ரொம்ப காலத்திற்கு முன்பு மிஸ்ஸியம்மா என்ற படம்வந்து சக்கை போடு போட்டது. இப்போது அதே பெயரில் தெலுங்கில் ஒரு படம்வந்து பெரும் வெற்றி பெற்றது.

இந்தப் படம் தமிழிலும் உருவாகிறது. அசின்தான் நாயகியாக நடிக்கவிருந்தார்.ஆனால் சேச்சி இப்போது அப்படத்தில் இல்லையாம். காரணம் டைட் கால்ஷீட் என்றுகூறுகிறார்கள்.

அசினோட ராசி என்னவென்றால் வருட ஆரம்பத்திலிருந்து மத்தி வரை ஒரு படம்கையில் இருக்காது. திடுதிப்பென்று நிறையப் படஙகளில் புக் ஆகி பிசியாகி விடுவார்.இப்போதும் அதே கதை தான் நடந்துள்ளது.

இந்த வருட தொடக்கத்திலிருந்து ஒரு படமும் இல்லாமல் விளம்பரப் படங்களில் படுபிசியாகிவிட்டார் அசின். இப்போது ஆத்தா கையில் 3 படங்கள். விஜய்யுடன்போக்கிரி, அஜீத்துடன் ஆழ்வார், கமலுடன் தசாவதாரம்.

இந்த கேப்பில்தான் மிஸ்ஸியம்மா வாய்ப்பு வந்தது. ஹீரோயினுக்கு முக்கியத்துவம்தரும் கதை என்பதால் நடிக்க ஆர்வமாக இருந்தார். சம்பளத்தைக் கூட குறைத்துக்கொள்வதாக கூறியிருந்தார்.

ஆனால் கமல், விஜய், அஜீத் படங்கள் வந்து விட்டதால் கால்ஷீட்டை அட்ஜெஸ்ட்செயத் கொள்ள முடியவில்லையாம். இதனால் மிஸ்ஸியம்மாவை விட்டு விட முடிவுசெய்துவிட்டார் அசின்.

அசின் புதிதாக ஒரு கொள்கையை வகுத்துள்ளாராம். அதாவது தமிழில் விஜய், அஜீத்,விக்ரம், சூர்யா போன்ற முன்னணியில் உள்ள ஹீரோக்களுடன் மட்டுமே நடிப்பது.

மூத்த ஹீரோக்களுடன் கோடிப் பணம் கொடுத்தாலும் ஜோடி போடுவதில்லைஎன்பதுதான் அந்தக் கொள்கையாம். (ஆனால் தெலுங்கில் ஓல்டு, போல்டுகள்என்றாலும் நடிக்கிறார்) தமிழில் ரஜினி, கமல் என்றால் மட்டும் இந்த விதியை லேசாகதளர்த்திக் கொள்வாராம்.

Read more about: asin misses missiamma
Please Wait while comments are loading...