»   »  ஐஸ் அசின்!

ஐஸ் அசின்!

Subscribe to Oneindia Tamil

கோலிவுட்டில் அசின் போல சோப்புப் போடுவதில் யாரும் கிடையாது என்கிறார்கள்.

மலபார் மல்லியான அசின், ஆள் பார்த்துப் பழகுவதில் அசத்தல் பார்ட்டியாம். அதாவது தனக்கு காரியம் ஆகவேண்டும் என்றால், யாரைப் பிடித்தால் காரியம் ஆகும் என்பதில் கில்லி போல சொல்லி அடிப்பாராம்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் மட்டுமே இப்போதைக்கு அசின் ஆர்வம் காட்டுகிறார். மலையாளத்தைஇப்போதைக்கு பெரிதாக அவர் கண்டுகொள்வதில்லை.காரணம் இந்த இரு மொழிகளில் மட்டுமே நல்ல டப்பும், தனி ஆவர்த்தனம் செய்ய பெரிய அளவில்வாய்ப்புகளும் கிடைப்பதால். இரு மொழிகளிலும் முன்னணியில் உள்ள இளம் ஹீரோக்களுடன் மட்டுமேநடிப்பது என்பதும் அசினின் கொள்கை முடிவாம். கமல் போன்ற ஒரு சில மூத்த ஹீரோக்களுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டாம்.

இளம் ஹீரோக்களிலும் கூட எல்லோருடனும் சேர்ந்து நடிக்க விருப்பம் இல்லையாம் அசினுக்கு. அதாவது தமிழ்என்றால் விஜய், அஜீத், விக்ரம், சூர்யா என சிலருடனும், தெலுங்கிலும் அதேபோல செலக்டிவ்வாக சிலருடனும்மட்டுமே நடிப்பாராம் அசின்.

இந்த வட்டாரத்தை பலப்படுத்திக் கொள்ள சம்பந்தப்பட்ட ஹீரோக்களின் மனைவிகளுடன் படு நெருக்கமானநட்பை ஏற்படுத்திக் கொள்கிறாராம். அதன் மூலம் தொடர்ந்து தனக்கு அந்த ஹீரோக்களுடன் வாய்ப்பு கிடைக்கும்என்பதால் இந்த ஐஸ் நட்பாம்.

இப்போது விஜய்யின் மனைவியும், அசினும் நெருங்கிய தோழிகளாகி விட்டார்களாம். படு அன்னியோன்யமாகபேசிக் கொள்ளும் அளவுக்கு தோஸ்துகளாம். அதேபோல விஜய்யின் அம்மாவுடனும் நட்பை ஏற்படுத்திக்கொண்டு விட்டார் அசின்.

இதேபோல, அஜீத்தின் மனைவியான நடிகை ஷாலினியுடனும் இப்போது நட்பாகியுள்ளாராம் அசின். வரலாறுபடத்தின்போது கூட ஷாலினியுடன் அசின் பழக்கம் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் இப்போது ஆழ்வார்படத்தின் ஷூட்டிங்கின்போது ஷாலினியுடன் தோஸ்த் ஆகி விட்டாராம்.

விக்ரமின் மனைவியும் கூட அசினுக்கு பிரண்டுதானாம். இப்படி தான் விரும்பும் நடிகர்களின் குடும்பவட்டத்திற்குள் புகுந்து விட்டால், அடுத்தடுத்து தனக்கு வாய்ப்புகள் வந்தவண்ணம் இருக்கும் என்பது அசினின்கணக்காம்.

அப்படியானால் சூர்யாவின் மனைவியாகி விட்ட முன்னாள் போட்டியாளர் ஜோதிகாவுடனும் நட்பை ஏற்படுத்திக்கொள்வாரா அசின் என்று கேட்கிறார்கள் குசும்பர்கள் சிலர்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil