'அசின்.. உங்களுக்கு திருமணமாகிடுச்சாமே...!!'

By Shankar

யார் என்னைப் பார்த்தாலும் 'அசின்.. உங்களுக்குத் திருமணமாகிடுச்சாமே'ன்னுதான் கேட்கிறார்கள்... என்னைப் பார்த்தால் திருமணமான பெண் மாதிரியாகவா தெரிகிறேன், என்கிறார் நடிகை அசின்.

தமிழிலிலிருந்து பாலிவுட் போய், இப்போது கிட்டத்தட்ட காணாமல் போய்விட்ட அசின், ரகசிய திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டதாக பேச்சு நிலவுகிறது.

அதற்கேற்ற மாதிரி, அவருக்கு சுத்தமாக பட வாய்ப்புகளும் இல்லை. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா என சுற்றிக் கொண்டிருப்பதாக அசினும் அவ்வப்போது சொல்லிக் கொண்டிருந்தார்.

மறுப்பு

மறுப்பு

இந்த நிலையில் தனது திருமணச் செய்திகளை மறுத்துள்ளார் அசின். யார் என்னைப் பார்த்தாலும், உடனே 'அசின்... உங்களுக்கு திருமணமாகிடுச்சாமே' என்றுதான் கேட்கிறார்கள். இதில் உண்மையில்லை, என்று அவர் மறுத்துள்ளார்.

அமெரிக்காவில்...

அமெரிக்காவில்...

"என் திருமணச் செய்தியை நான் அமெரிக்காவில் புத்தாண்டை கொண்டாடிக்கொண்டிருந்தபோதுதான் முதல் முறையாக கேள்விப்பட்டேன் (ஒலக மகா நடிப்புடா சாமீ...). ‘திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. விரைவில் திருமணம். மணமகன் அமெரிக்காவில் இருக்கிறார்' என்றார்கள், என் காதுபட.

இந்தி கலாச்சாரமே வேற...

இந்தி கலாச்சாரமே வேற...

இந்தி திரை உலக கலாசாரம் வித்தியாசமானது. அங்கு பல நட்சத்திரங்கள் டேட்டிங்கில் ஈடுபடுகிறார்கள். புத்தாண்டை கொண்டாட அவர்களுடைய பாய் பிரண்டுடன் ஏதாவது ஒரு வெளிநாட்டிற்கு சென்றுவிடுவார்கள். நான் புத்தாண்டை கொண்டாட அமெரிக்கா சென்றது தெரிந்ததும், மும்பையில் இருந்து எனக்கு திருமணம் என்ற செய்தியை உருவாக்கிவிட்டார்கள். ஆனால் என் எல்லா பயணத்திலும் என் பெற்றோரோ, தோழிகளோ மட்டும்தான் என் உடனிருப்பார்கள்"

அடுத்து திருமணம்தான்...

அடுத்து திருமணம்தான்...

"என் வாழ்க்கையின் அடுத்த படி திருமணம்தான். அதைப் புரிந்து கொண்டிருக்கிறேன். ஆனால் கல்யாணத்தில் ஒருபோதும் அவசரம் காட்டக் கூடாது.

லிவ் இன் முறையில்...

லிவ் இன் முறையில்...

பாலிவுட்டில் பலரும் திருமணமே வேண்டாம் என்று கூறிக்கொண்டு வாழ்கிறார்கள். பலர் திருமணம் செய்யாமலே சேர்ந்து வாழும், ‘லிவ் இன் ரிலேஷன்ஷிப்'பில் இருக்கிறார்கள்.

நல்ல பார்ட்னர் தேடறேன்

நல்ல பார்ட்னர் தேடறேன்

என்னை திருமணம் செய்துகொள்ளும்படி வீட்டில் கூறத் தொடங்கிவிட்டார்கள். நல்ல பார்ட்னரை கண்டுபிடிக்கவேண்டும். என்ன இருந்தாலும் அடுத்த ஒரு ஆண்டிற்கு திருமணம் இல்லை," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X