இந்திக்குப் போகும் 'மகாலட்சுமி'!

By Siva

Asin
தெலுங்கில் அம்மா நானா ஒ தமிழ் அம்மாயி என்ற பெயரில் வெளியாகி, தமிழில் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்று மொழி மாறி வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படத்தை தற்போது அதன் ஒரிஜினல் இயக்குநரான பூரி ஜெகன்னாத் இந்தியிலும் எடுக்கப் போகிறார். நாயகி தமிழ்,தெலுங்கில் நடித்த அதே ஆசின்தான்.

தெலுங்கில் வெளியான அம்மா நானா தமிழ் அம்மாயி படத்தை ஜெயம் ரவி, ஆசின் நடிக்க தமிழில் ரீமேக் செய்தார் ஜெயம் ராஜா. படம் சூப்பர் ஹிட். ஆசினுக்கு இந்தப் படம்தான் முதல் தமிழ்ப் படம். இப்படத்துக்குப் பின்னர் திரும்பிப் பார்க்கக் கூட நேரமில்லாமல் தமிழை பெரிய ரவுண்டு அடித்து முடித்தார் ஆசின்.

இப்போது இந்தியில் வலம் வந்து கொண்டிருக்கிறார். முதல் படமான கஜினி பெரும் ஹிட் ஆகி ஆசினுக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. ஆனால் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆகி பின்னர் சித்தெறும்பு ஆன கதையாக இப்போது ஆசினுக்கான இந்தி வாய்ப்புகள் பிரகாசமாக இல்லாத நிலை.

இந்த நேரம் பார்த்து அவரது வயிற்றில் பாலை ஊற்றும் விதமாக தனது அம்மா நானாவை இந்தியில் ரீமேக் செய்யப் போகிறார் பூரி ஜெகன்னாத் என்ற தகவல் ஆசினை வந்து சேர்ந்தது. அவரை அணுகி நான்தானே ஹீரோயின் என்று கேட்க, அவரும் ஆமாமா என்று வேகமாக மண்டையை ஆட்டி வைத்துள்ளாராம். இதனால் ஆசின் படு குஷியாக காணப்படுகிறார்.

இந்தி ரீமேக்கில் ஆசின் நடிப்பதாக இருந்தால், பூரியுடன் ஆசின் இணைவது இது மூன்றாவது முறையாகும். அம்மா நானா தவிர பூரி இயக்கி சிவமணி என்ற படத்திலும் ஆசின் நடித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

இதற்கிடையே, தான் அமிதாப் பச்சனை வைத்து இந்தியில் இயக்கி புத்தா ஹோகா தேரா பாப் படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வருவது குறித்து பூரி கவலைப்படவில்லையாம். மாறாக அமிதாப்பச்சனை வைத்து இயக்கியதே தனது பெருமை என்கிறார்.

இந்தப் படத்தை முடித்து விட்டு தி பிசினஸ்மேன் என்ற படத்தை இந்தி மற்றும் தெலுங்கில் இயக்கப் போகிறாராம். அதன் பின்னர்தான் ஆசினுடன் அம்மா நானாவுக்காக இணையப் போகிறாராம்.

பூரியின் 'அம்மா நானா' விளையாட்டு ஆசினுக்கு இந்தியில் பிரேக் தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X