‘வெல்கம் பேக்’... ஜான் ஆப்ரகாம் ஜோடியாகும் வாய்ப்பு: ஸ்ருதியிடம் பறி கொடுத்த அசின்
மும்பை: தமிழில் கஜினி படம் தந்தப் புகழைப் பிடித்துக் கொண்டு ஹிந்திக்குச் சென்றவர் அசின். ஹிந்தி கஜினியும் அவருக்கு நன்றாகவே அமைந்த போதும், அடுத்தடுத்து வந்த வாய்ப்புகள் சொல்லிக் கொள்கிற மாதிரி அமையவில்லை.
மீண்டும் தமிழுக்கு வர எடுத்த முயற்சிகளும் பலிக்கவில்லை. திடீர் நல்லச் செய்தியாக ஜான் ஆபிரகாம் ஜோடியாகும் வாய்ப்புக் கதவைத் தட்டிய மகிழ்ச்சியில் இருந்தார் அசின். ஆனால் இப்போது அதுவும் கை நழுவிப் போய் விட்டது.
தற்போது அந்தப்பட நாயகியாகும் வாய்ப்பு ஸ்ருதிக்கு வாய்க்க இருக்கிறதாம்....

வெலகம் பேக்....
இந்திப்பட இயக்குநரான அனீஸ் பாஸ்மி இயக்கத்ஹ்டில் 2007ல் வெளிவந்து வெற்றி பெற்றப் படம் ‘வெல்கம்' தற்போது அதன் இரண்டாம் பாகமான ‘வெல்கம் பேக்' எடுக்கும் முயற்சியில் மும்முரமாக இருக்கிறார் அனீஸ்.

அசின் இடத்தில் ஸ்ருதி...
ஹீரோவாக ஜான் ஆபிரகாம் நடிக்கிறார். ஹீரோயினுக்காக முதலில் ஒப்பந்தம் செய்யப் பட்டவர் அசின். ஆனால், தற்போது அவரை மாற்றி விட்டு ஸ்ருதி ஹாசனிடம் பேசி, ஓகே வாங்கி விட்டார்களாம்.

தொடர் படங்களின் வெற்றி...
சமீபத்தில் ஸ்ருதி நடித்து வெளிவந்த ‘ராமையா ஒவஸ்தாவையா', மற்றும் ‘டி-டே' படங்களில் அவரது நடிப்பைப் பார்த்த பின் இந்த முடிவை எடுத்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கதைக்கேற்ற நாயகி....
இந்த அதிரடி ஹீரோயின் மாற்றம் குறித்து அனீஸ் கூறியதாவது, ‘ஸ்ருதி இந்தக் கதைக்குப் பொருத்தமாக இருப்பதால் அவரிடம் பேசிக் கொண்டிருக்கிறோம்' எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











