பிறந்த நாள் குஷியில் ஆசின்!

By Staff


அக்டோபர் 26ம் தேதி வரும் தனது பிறந்த நாளை இதுவரை இல்லாத அளவுக்கு விமரிசையாகக் ெகாண்டாடத் திட்டமிட்டுள்ளாராம் ஆசின்.

Click here for more images

ஆசின் சினிமாவுக்கு வந்த பிறகு இதுவரை தனது பிறந்த நாளை பெரிய அளவில் கொண்டாடியதில்லை. ஆனால் இந்த முறை தனது பிறந்த நாளை வெகு விமரிசையாகக் கொண்டாடப் போகிறாராம்.

இதுகுறித்து ஆசின் குஷியோடு கூறுகையில், சினிமாவுக்கு வந்த பிறகு எனது பிறந்த நாளை எனது குடும்பத்தோடும், நண்பர்களோடும் சிறப்பாக ெகாண்டாட வேண்டும் என்று நினைப்பேன், திட்டமிடுவேன். ஆனால் எனது பிசியான ஷெட்யூல் அதை ஒரு போதும் அனுமதித்ததே இல்லை.

கடந்த ஐந்து வருடங்களாகவே ஷூட்டிங் ஸ்பாட்டுகளில்தான் எனது பிறந்த நாளை கொண்டாடி வந்துள்ளேன். ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த ஆண்டு எனது பிறந்த நாளின்போது ஷூட்டிங் எதுவும் இல்லை. வேறு கமிட்மென்ட்களும் இல்லை.

வருகிற 26ம் தேதியன்று, எனது பிறந்த நாளின்போது சென்னையில்தான் நான் இருக்கப் போகிறேன். அன்று எனது பிறந்த நாளின்போது எனது விருப்பப்படி கொண்டாடப் போகிறேன்.

அந்த நாளில் உருப்படியான சில காரியங்களை செய்யவும் திட்டமிட்டுள்ளேன். அது என்ன என்பது இப்போதைக்கு சஸ்பென்ஸ். அதை விரைவில் மீடியாக்களுக்கு அறிவிப்பேன் என்றார் ஆசின்.

ஆசின் வைக்கும் சஸ்பென்ஸ், அவரது ரசிகர் மன்றம் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரம் கூறுகிறது. தனது பிறந்த நாளின்போது ரசிகர் மன்றத்தையும், ஒரு அறக்கட்டளையையும் தொடங்கத் திட்டமிட்டுள்ளாராம் ஆசின்.

திரிஷா சில மாதங்களுக்கு முன்பு தனது ரசிகர் மன்றத்தையும் அறக்கட்டளை ஒன்றையும் தொடங்கினார். அந்த வரிசையில் ஆசினும் இணைவாரா என்பது வருகிற 26ம் தேதியன்று தெரியும்!

More from Filmibeat

Read more about: asin celebrates cinema kollywood
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X