உடல் உறுப்புகளை தானம் செய்கிறேன்! - அறிவித்தார் அசின்
தனது உடல் உறுப்புகள் அனைத்தையும் தானம் செய்யப் போவதாக நடிகை அசின் தெரிவித்துள்ளார்.
தமிழில் உச்சத்திலிருந்த நேரத்திலேயே இந்தியில் நடிக்கப் போய்விட்டவர் அசின். அங்கு அவருக்கு ஆரம்பம் அமர்க்களமாக இருந்தாலும், போகப் போக மவுசு குறைய ஆரம்பித்துவிட்டது.

தமிழில்
இப்போது இந்தியில் அபிஷேக் பச்சன் ஜோடியாக ‘ஆல் இஸ் வெல்' படத்தில் மட்டும் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ் படங்களில் மீண்டும் நடிக்க ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளார். சிலரிடம் கதை கேட்கவும் தொடங்கிவிட்டாராம்.

விடுவார்களா?
ஆனால் தமிழுக்கு வர கொஞ்சம் தயக்கமாகவும் உள்ளதாம். அசினின் இலங்கைத் தொடர்புகள் விஷயத்தில் இங்குள்ள தமிழ் அமைப்புகள் இன்னும் சமாதானமாகவில்லை. எனவே அவர் நடிக்கப் போவதாக செய்தி வந்தால் நிச்சயம் எதிர்ப்பு காட்ட ஆரம்பிப்பார்கள்.

கல்வி உதவிகள்
இன்னொரு புறம் சமூக சேவை பணியிலும் ஆர்வம் காட்டி வருகிறார் அசின். ஏழை மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவிகள் வழங்குகிறாராம். சமீபத்தில் மும்பையில் ரத்ததான முகாம் நடந்தது. இதை துவக்கி வைக்க அசினை அழைத்திருந்தனர்.

ரத்த தானம்
அங்கு சென்ற அசினும் ரத்த தானம் செய்தார். அத்துடன் தனது கண்கள் மற்றும் உடல் உறுப்புகளை தானம் செய்யவும் முடிவு செய்துள்ளார். இதற்கான உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனை அசினும் உறுதிப்படுத்தினார்.

உடல் தானம்
இதுகுறித்து அவர் கூறுகையில், "என் உடல் உறுப்புகளை தானம் செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அதை இப்போது செய்துள்ளேன். தேவையானவர்களுக்கு பயன்பட வேண்டும் என்பதற்காக உறுப்புகளை தானம் செய்துள்ளேன்.

நீங்களும் தானம் பண்ணுங்க...
எனது நடவடிக்கை மற்றவர்களையும் இதுபோல் உடல் உறுப்புகள் தானம் செய்வதற்கு தூண்டுகோலாக இருக்கும் என்று நம்புகிறேன். எல்லோரும் என்னுடன் இணைந்து உடல் உறுப்புகள் தானம் செய்வதற்கு உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்," என்றார்.


Click it and Unblock the Notifications











