யார் இது? அசினுக்கு இவ்வளவு பெரிய பொண்ணா.. இணையத்தில் வெளியான புகைப்படம்.. செம அதிர்ச்சி!
நடிகை அசின் தனது மகளின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: நடிகை அசின் தனது மகளின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். பெரும்பாலான ரசிகர்களை இந்த புகைப்படம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
நடிகை அசின் ஒரு காலத்தில் தமிழ் படங்களில் முன்னணி நடிகையாக இருந்தார். இவரின் எம் குமரன் சன் ஆப் மஹாலட்சுமி மற்றும் கஜினி இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் ஆனது.
கஜினி படத்திற்கு பின் இவர் இந்தியா முழுக்க பிரபலம் ஆனார். அதன்பின் அவர் இந்தி படங்களிலும் நடிக்க தொடங்கினார்.

இந்தி
கஜினி இந்தி பட ரீமேக்கில் நடித்த இவர் வரிசையாக சில சல்மான் கான் படங்களில் நடித்தார். ஆனால் போக போக இவருக்கு இந்தியில் மார்க்கெட் போனது. தமிழிலும் காவலன் படத்தில் இவரின் நடிப்பு பெரிதாக யாரையும் ஈர்க்கவில்லை.

யாரை திருமணம்
இதையடுத்து ராகுல் சர்மா என்ற தொழிலதிபரை இவர் திருமணம் செய்து கொண்டார். அதன்பின் சினிமாவில் இருந்து மொத்தமாக விலகி விட்டார். தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் மட்டும் அவ்வப்போது இவர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
ஓணம்
இந்த நிலையில் ஓணம் பண்டிகையை ஒட்டி இவர் தன்னுடைய மகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவர்களுக்கு ஆரின் என்ற பெண் குழந்தை உள்ளது. ஓணம் விழாவிற்கு அணியும் பாரம்பரிய வெண்ணிற பட்டு உடையை ஆரின் அணிந்துள்ளார்.
இவ்வளவு பெரிய பொண்ணா
ஆரினுக்கு பத்து மாதங்கள்தான் ஆகிறது. ஆனாலும் அசினுக்கு இவ்வளவு பெரிய குழந்தை இருக்கிறதா? அதற்குள் இந்த குழந்தை வளர்ந்துவிட்டதா? அடுத்த குட்டி நடிகை தயார் ஆகிவிட்டார் என்று ரசிகர்கள் அவரின் போட்டோவிற்கு கீழ் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இதற்கு முன்
இதற்கு முன்பே அசின் ஆரின் குறித்து நிறைய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











