வாவ்வ்... யாருக்குமே கிடைக்காத பர்த்டே கிஃப்ட் அசினுக்கு கிடைச்சிருக்கு..!
Recommended Video

டெல்லி : நடிகை அசின் சென்ற வருடம் மைக்ரோமேக்ஸ் நிறுவன அதிபர் ராகுல் ஷர்மாவை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு நேற்று பெண் குழந்தை பிறந்துள்ளது.
'இன்று எங்களுக்கு தேவதை போல பெண் குழந்தை பிறந்திருக்கிறாள். கடந்த 9 மாதங்கள் எங்கள் இருவருக்கும் மறக்க முடியாத தருணங்கள்.' என ராகுல் ஷர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மலையாளம், தெலுங்கு திரையுலகில் ஒருசில படங்களில் நடித்த அசின், தமிழில் கடந்த 2004-ல் வெளியான எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தின் மூலம் அறிமுகமானார்.

முன்னணி நடிகர்களுடன்
விஜய்யுடன் 'சிவகாசி', 'போக்கிரி', அஜீத்துடன் 'வரலாறு', சூர்யாவுடன் 'வேல்' உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், சூர்யாவுடன் நடித்த 'கஜினி' படத்தின் இந்தி ரீமேக்கிலும் நடித்து இந்தி திரை உலகிலும் பிரபலமானார்.

மைக்ரோமேக்ஸ் ஓனர்
'கஜினி' படத்தில் செல்போன் நிறுவன அதிபரைக் காதலிப்பதாகக் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அதேபோலவே, நடிகை அசினுக்கும், மைக்ரோமேக்ஸ் நிறுவனரான ராகுல் சர்மாவுக்கும் டெல்லியில் கடந்த 2016 ஜனவரியில் திருமணம் நடந்தது.

பெண் குழந்தை
கிறிஸ்துவ முறைப்படியும், இந்து முறைப்படியும் இவர்களின் திருமணம் நடந்தது. நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இந்தத் திருமணத்திற்கு அழைக்கப்பட்டனர். இந்நிலையில் அசின், ராகுல் ஷர்மா ஜோடிக்கு நேற்று பெண் குழந்தை பிறந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறந்தநாள் பரிசு
'தேவதை போல பெண் குழந்தை பிறந்திருக்கிறது. எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி கொள்ள கடமைப்பட்டுள்ளேன். அவள் என்னிடம் கேட்கும் சிறந்த பிறந்தநாள் பரிசு இதுதான்!' என இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளார் அசின். அசின் பிறந்தநாள் அக்டோபர் 26 என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











