செல்ல மகளின் 3 வது பிறந்த நாளைக் கொண்டாடிய பிரபல நடிகை அசின்.. பெயருக்கு இப்படியொரு விளக்கம்!

By

சென்னை: தனது மகளின் மூன்றாவது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார், பிரபல நடிகை அசின் .

நடிகை அசின், தொழிலதிபர் ராகுல் சர்மாவை திருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டிலாகிவிட்டார்.

இவர்களுக்கு அரின் ராய்ன் ( Arin Rayn) என்ற மகள் இருக்கிறார். இவருக்கு கடந்த 26 ஆம் தேதி 3 வயது ஆனது.

ஏன் இந்த பெயர்?

ஏன் இந்த பெயர்?

மகளின் மூன்றாவது பிறந்த நாளை கணவர் மற்றும் குடும்பத்துடன் பிரமாண்டமாகக் கொண்டாடிய நடிகை அசின், நேற்று அதுபற்றி இன்ஸ்டாகிராமில் தகவல் தெரிவித்துள்ளார். கூடவே, ஏன் தன் மகளுக்கு அரின் என்று பெயர் வைத்தேன் என்பதையும் அந்த பெயருக்கான விளக்கத்தையும் கூறியுள்ளார்.

மலபார் பெண்ணாக

மலபார் பெண்ணாக

தமிழில், ஜெயம் ரவி ஜோடியாக 'எம்.குமரன் சன் ஆப் மஹாலட்சுமி' படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் அசின். இதில் மலபார் பெண்ணாக நடித்திருப்பார். தொடர்ந்து சூர்யா ஜோடியாக கஜினி, விஜய் ஜோடியாக சிவகாசி, போக்கிரி, காவலன், அஜித்துடன் ஆழ்வார் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார்.

கஜினி அறிமுகம்

கஜினி அறிமுகம்

தமிழில் சூப்பர் ஹிட்டான கஜினி படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் ஆமிர்கான் ஹீரோவாக நடித்தார். இந்தப் படம் மூலம் இந்தியில் அறிமுகமானார் அசின். பின்னர் அவருக்கு அங்கும் வாய்ப்புகள் குவிந்தன. சல்மான் கான் ஜோடியாக ரெடி, அக்‌ஷய்குமார் ஜோடியாக ஹவுஸ்புல் 2, கில்லாடி 786, அஜய்தேவ்கனுடன் போல்பச்சன் படங்களில் நடித்தார்.

காதலான நட்பு

காதலான நட்பு

இந்நிலையில், இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் தனது நண்பரும் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான ராகுல் சர்மாவை, நிகழ்ச்சி ஒன்றில் நடிகை அசினுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். இதையடுத்து இருவரும் நட்பாகப் பழகினர். நட்பு காதலானது. இருவரும் காதலில் விழுந்தனர். சில மாதங்களாகக் காதலித்து வந்தனர்.

நடிப்பை விட்டார்

நடிப்பை விட்டார்

கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் திருமணம், இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடந்தது. திருமணத்துக்குப் பிறகு நடிப்பதை விட்டுவிட்ட நடிகை அசின், தனது மகளை கவனித்து வருகிறார். தற்போது மூன்று வயதாகிவிட்ட அரின் ராயின் பிறந்த நாளை கொண்டாடியுள்ள நடிகை அசின் கூறியிருப்பதாவது:

முதல் வார்த்தைகள்

முதல் வார்த்தைகள்

'அரின் என்பதை எங்கள் முதல் பெயர்களின் வார்த்தையில் இருந்து எடுத்தோம். Rayn என்பது ரா - யின் என்று ஒரு திருப்பத்துடன் உச்சரிக்கப்படுகிறது. வாழ்த்து மற்றும் ஆசிர்வாதங்களைக் கூறிய அனைவருக்கும் நன்றி. தாமதமான போஸ்ட்டுக்கு வருத்தத்தை தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X