மும்பையில் இருந்து கிளம்பிய இடத்திற்கே மீண்டும் வருகிறாராம்ல அசின்!!!
மும்பை: பாலிவுட்டுக்கு போகிறேன் என்று சென்ற அசின் மீண்டும் தென்னிந்திய திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
கோலிவுட்டின் முன்னணி நாயகியாக இருந்தவர் அசின். இந்நிலையில் முருகதாஸ் கஜினியை இந்தியில் ரீமேக் செய்யும்போது அதில் அசினை நாயகியாக நடிக்க வைக்க பாலிவுட் அழைத்துச் சென்றார். கஜினி படத்தில் நடிக்க சென்றவர் மும்பைக்கே ஜாகையை மாற்றிவிட்டார்.

நான் தான்
பாலிவுட்டின் நம்பர் ஒன் நடிகை நான் தான், நான் தான் என்று மைக் செட் வைக்காத குறையாக அசின் கூறியது அங்கு யார் காதிலும் விழவில்லை.

மவுசும் இல்லை
பாலிவுட்டில் அசினுக்கு மவுசும் இல்லை. அசகாய சூரிகள் ஆயிரம் பேர் உள்ள பாலிவுட்டில் அசினை கண்டுகொள்ள ஒரு சிலர் தான் இருக்கிறார்கள்.

தென்னிந்திய நடிகைகள்
மும்பையில் தென்னிந்திய திரை உலக நடிககளை பார்த்தால் அசின் முகத்தை திருப்பிக் கொண்டு செல்வதாக செய்திகள் வெளியாகின.

மீண்டும் தெற்கு
பாலிவுட்டில் செட்டிலான அசின் தற்போது மீண்டும் தென்னிந்திய திரைப்படத்தில் நடிக்க உள்ளாராம். அவரைத் தேடி வந்த கதைக்கு ஓ.கே. சொல்லியிருக்கிறாராம்.

இலங்கை
அசின் சல்மான் கானுடன் நடித்த ரெடி படத்திற்காக எதிர்ப்பையும் மீறி படப்பிடிப்புக்கு இலங்கை சென்றார்.

ராஜபக்சே
படப்பிடிப்புக்கு சென்றவர் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் கொள்கை பரப்புச் செயலாளர் போன்று பேசினார். ராஜபக்சேவின் மனைவியுடன் சேர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











