மகளின் புகைப்படத்தை முதல்முறையாக வெளியிட்ட அசின்: பெயர் அரின்

By Siva

Recommended Video

சினி சிப்ஸ் : இன்றைய சினிமா செய்திகள்- வீடியோ

மும்பை: தனது மகளின் புகைப்படத்தை முதல்முறையாக வெளியிட்டுள்ளார் அசின்.

கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற இடத்தில் தொழில் அதிபர் ராகுல் சர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அசின். அவருக்கு கடந்த ஆண்டு 25ம் தேதி பெண் குழந்தை பிறந்தது.

அந்த செய்தியை பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தான் தெரிவித்தார்.

பெயர்

பெயர்

அசினுக்கு பெண் குழந்தை பிறந்த செய்தி அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்த குழந்தை எப்படி இருக்கும், அதன் பெயர் என்னவென்று யாருக்கும் தெரியாது. குழந்தையின் புகைப்படத்தையோ, பெயரையோ அவர்கள் வெளியிடாமல் வைத்திருந்தனர்.

அரின்

அசின் மகளின் ஒன்றாவது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்கள். அந்த கொண்டாட்டத்தின்போது எடுத்த புகைப்படங்களை அசின் மற்றும் ராகுல் சமூக வலையதளங்களில் வெளியிட்டுள்ளனர். முதல்முறையாக தங்கள் மகளின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். அவர்கள் அந்த குட்டிக்கு அரின் என்று பெயர் வைத்துள்ளனர்.

மகிழ்ச்சி

அரினுக்கு ஒரு வயது தான் என்றாலும் பார்க்க பெரிய பிள்ளை போன்று இருக்கிறார். ஏன் இவ்வளவு வேகமாக வளரணும் என்று கேட்டு மகளின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ராகுல் சர்மா.

மகள்

மகள்

முன்னதாக அசினுக்கு குழந்தை பிறந்த தகவலை தெரிவித்து குட்டிப் பாப்பாவை தன் கையில் வைத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார் அக்ஷய் குமார். ஆனால் அந்த புகைப்படத்தில் குழந்தையின் முகமே தெரியவில்லை. அசினின் மகளை பார்க்க அவரின் ரசிகர்கள் ஓராண்டு காலம் காத்திருக்க வேண்டியதாகிவிட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X