கோலிவுட் ஹீரோயின்களை பார்த்தால் முகத்தை திருப்பிக் கொள்ளும் அசின்

By Siva

மும்பையில் கோலிவுட் ஹீரோயின்களைப் பார்த்தால் நடிகை அசின் முகத்தை திருப்பிக் கொள்கிறார் என்று கூறப்படுகிறது.

அசின் மலையாளத்தில் அறிமுகமானாலும் தமிழில் தான் பெரிய நடிகையாகி கொடிகட்டிப் பறந்தார். இங்குள்ள முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீர் என்று பாலிவுட் ஆசை வந்து அங்கு சென்றார். அவர் என்றைக்கு பாலிவுட் சென்றாரோ அன்றில் இருந்து அவரைப் பற்றி ஏராளமான வதந்திகள், செய்திகள் வெளி வருகின்றன.

பாலிவுட் படங்களில் வாய்ப்பு பெறுவதற்காக அசின் தான் தன்னைப் பற்றி தானே வதந்திகளைப் பரப்புவகாக பாலிவுட் ஹீரோயின்கள் கூறுகிறார்களாம். யார் என்ன கூறினாலும் சளைக்காமல் இருக்கும் அசின் தானே பாலிவுட்டின் நம்பர் 1 ஹீரோயின் என்று கூறிக் கொள்கிறார். அங்கு அவர் மூன்று ஹிட் படங்கள் கொடுத்துவிட்டாராம் அதனால் தான் இப்படி சொல்லியிருக்கிறார்.

இனி தமிழ் படங்களில் எல்லாம் நடிக்க மாட்டேன் என்று அவர் கூறியதாக செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் அவரைப் பற்றி புதிய செய்தி கிடைத்துள்ளது. நம்ம கோலிவுட் ஹீரோயின்கள் யாரையாவது மும்பையில் பார்த்தால் அசின் ஒரு வார்த்தை கூட பேசமால் முகத்தை திருப்பிக் கொள்கிறாராம். கோலிவுட் ஹீரோயின்கள் இது ஏன் இவர் இப்படி நடந்து கொள்கிறார் என்று கூறுகிறார்களாம்.

Read more about: asin kollywood அசின்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X