»   »  அடக்க நாயகி அசின்! முன்னணி நடிகைகளில் நல்ல நடிகை என்ற பெயரை அசின் விரைவில் பெறுவார் போல. அந்த அளவுக்கு தயாரிப்பாளர்களின்மனதில் இடம் பிடித்து வருகிறார் இந்த கேரள நடிகை. தமிழ்ப் படத் தயாரிப்பாளர்களின் பெரும் பிரச்சினையாக இருப்பது, படத் தயாரிப்பு செலவு மட்டும் அல்ல. நடிகர்களையும்,நடிகைகளையும கட்டி மேய்ப்பது தான் அவர்களுக்கு மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. முதலில் சம்பளம், பின்னர் படப்பிடிப்பின் போது அவர்கள் வைக்கும் தண்டச் செலவுகள். இந்த இரண்டையும் சமாளித்துவிட்டால் போதும் அவர்களுக்கு. அந்த அளவுக்கு நடிகர், நடிகைகளின் டார்ச்சர் தாங்க முடியாத அளவுக்கு இருக்கிறதாம். நடிகைகளில் அதிக செலவு வைப்பவர் நயன்தாரா தானாம். சம்பளத்தை ஏற்றி விட்டதோடு மட்டுமில்லாமல் படப்பிடிப்பின்போது கேரவன் வேண்டும், அது வேண்டும், இது வேண்டும் என்று ஏகப்பட்ட செலவுகளை தயாரிப்பாளர் தலையில் கட்டிவைப்பாராம் அம்மணி. ஆனால் வேகமாக முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் இன்னொரு முன்னணி நாயகியான அசின், இதில் விதி விலக்காகஇருக்கிறாராம். சம்பளத்தை நேரடியாகவே தயாரிப்பாளர்களிடம் பேசுகிறாராம் அசின். சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள தயாரிப்பாளர் தரப்பு கோரினாலும் அதை உடனே ஏற்றுக் கொண்டு அட்ஜஸ்ட் செய்கிறார்.அதேபோல கறாராக சம்பளத்தை வாங்குவதில்லையாம். படப்பிடிப்பின் போதும் ரொம்ப தயாரிப்பாளர்களை கெடுபிடி செய்வதில்லை. கொடுக்கும் வசதிகளை மட்டுமே பயன்படுத்திக்கொள்கிறார். ரொம்ப வசதிகளை எதிர்பார்ப்பது கிடையாது. ஒன்றாக நடிக்கும் நடிகர்ளோடு நல்ல நட்பாகவும் பழகுவதால்அசின் படம் என்றால் யூனிட்டாரும் ரொம்ப சந்தோஷமாக வேலை பார்க்கிறார்களாம். அது மட்டுமல்ல, தனது காஸ்ட்யூமர், மேக்கப் மேன், டச்சப் கேர்ள் ஆகியோருக்கு அசினே சம்பளம் கொடுத்து விடுகிறாராம்.அந்த பணத்தைக் கூட தயாரிப்பாளர்களிடமிருந்து கறப்பது கிடையாது.இந்த காரணங்களுக்காக அசினை புக் செய்வதற்கு தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மத்தியில் ரொம்பவே அடிதடிநடக்கிறதாம். இப்போதைய நிலவரப்படி அசின் கையில் தான் அதிக படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கஜினியில் சூர்யாவுடனும், மஜாவில் விக்ரமுடனும் ஜோடியாக நடித்து வரும் அசின், மஜா படத்தில் கொஞ்சம்கூடுதலாகவே கிளாமர் காட்டி கலக்கி வருகிறாராம். நல்லா இருக்கட்டும்!

அடக்க நாயகி அசின்! முன்னணி நடிகைகளில் நல்ல நடிகை என்ற பெயரை அசின் விரைவில் பெறுவார் போல. அந்த அளவுக்கு தயாரிப்பாளர்களின்மனதில் இடம் பிடித்து வருகிறார் இந்த கேரள நடிகை. தமிழ்ப் படத் தயாரிப்பாளர்களின் பெரும் பிரச்சினையாக இருப்பது, படத் தயாரிப்பு செலவு மட்டும் அல்ல. நடிகர்களையும்,நடிகைகளையும கட்டி மேய்ப்பது தான் அவர்களுக்கு மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. முதலில் சம்பளம், பின்னர் படப்பிடிப்பின் போது அவர்கள் வைக்கும் தண்டச் செலவுகள். இந்த இரண்டையும் சமாளித்துவிட்டால் போதும் அவர்களுக்கு. அந்த அளவுக்கு நடிகர், நடிகைகளின் டார்ச்சர் தாங்க முடியாத அளவுக்கு இருக்கிறதாம். நடிகைகளில் அதிக செலவு வைப்பவர் நயன்தாரா தானாம். சம்பளத்தை ஏற்றி விட்டதோடு மட்டுமில்லாமல் படப்பிடிப்பின்போது கேரவன் வேண்டும், அது வேண்டும், இது வேண்டும் என்று ஏகப்பட்ட செலவுகளை தயாரிப்பாளர் தலையில் கட்டிவைப்பாராம் அம்மணி. ஆனால் வேகமாக முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் இன்னொரு முன்னணி நாயகியான அசின், இதில் விதி விலக்காகஇருக்கிறாராம். சம்பளத்தை நேரடியாகவே தயாரிப்பாளர்களிடம் பேசுகிறாராம் அசின். சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள தயாரிப்பாளர் தரப்பு கோரினாலும் அதை உடனே ஏற்றுக் கொண்டு அட்ஜஸ்ட் செய்கிறார்.அதேபோல கறாராக சம்பளத்தை வாங்குவதில்லையாம். படப்பிடிப்பின் போதும் ரொம்ப தயாரிப்பாளர்களை கெடுபிடி செய்வதில்லை. கொடுக்கும் வசதிகளை மட்டுமே பயன்படுத்திக்கொள்கிறார். ரொம்ப வசதிகளை எதிர்பார்ப்பது கிடையாது. ஒன்றாக நடிக்கும் நடிகர்ளோடு நல்ல நட்பாகவும் பழகுவதால்அசின் படம் என்றால் யூனிட்டாரும் ரொம்ப சந்தோஷமாக வேலை பார்க்கிறார்களாம். அது மட்டுமல்ல, தனது காஸ்ட்யூமர், மேக்கப் மேன், டச்சப் கேர்ள் ஆகியோருக்கு அசினே சம்பளம் கொடுத்து விடுகிறாராம்.அந்த பணத்தைக் கூட தயாரிப்பாளர்களிடமிருந்து கறப்பது கிடையாது.இந்த காரணங்களுக்காக அசினை புக் செய்வதற்கு தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மத்தியில் ரொம்பவே அடிதடிநடக்கிறதாம். இப்போதைய நிலவரப்படி அசின் கையில் தான் அதிக படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கஜினியில் சூர்யாவுடனும், மஜாவில் விக்ரமுடனும் ஜோடியாக நடித்து வரும் அசின், மஜா படத்தில் கொஞ்சம்கூடுதலாகவே கிளாமர் காட்டி கலக்கி வருகிறாராம். நல்லா இருக்கட்டும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

முன்னணி நடிகைகளில் நல்ல நடிகை என்ற பெயரை அசின் விரைவில் பெறுவார் போல. அந்த அளவுக்கு தயாரிப்பாளர்களின்மனதில் இடம் பிடித்து வருகிறார் இந்த கேரள நடிகை.

தமிழ்ப் படத் தயாரிப்பாளர்களின் பெரும் பிரச்சினையாக இருப்பது, படத் தயாரிப்பு செலவு மட்டும் அல்ல. நடிகர்களையும்,நடிகைகளையும கட்டி மேய்ப்பது தான் அவர்களுக்கு மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது.

முதலில் சம்பளம், பின்னர் படப்பிடிப்பின் போது அவர்கள் வைக்கும் தண்டச் செலவுகள். இந்த இரண்டையும் சமாளித்துவிட்டால் போதும் அவர்களுக்கு. அந்த அளவுக்கு நடிகர், நடிகைகளின் டார்ச்சர் தாங்க முடியாத அளவுக்கு இருக்கிறதாம்.

நடிகைகளில் அதிக செலவு வைப்பவர் நயன்தாரா தானாம். சம்பளத்தை ஏற்றி விட்டதோடு மட்டுமில்லாமல் படப்பிடிப்பின்போது கேரவன் வேண்டும், அது வேண்டும், இது வேண்டும் என்று ஏகப்பட்ட செலவுகளை தயாரிப்பாளர் தலையில் கட்டிவைப்பாராம் அம்மணி.


ஆனால் வேகமாக முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் இன்னொரு முன்னணி நாயகியான அசின், இதில் விதி விலக்காகஇருக்கிறாராம். சம்பளத்தை நேரடியாகவே தயாரிப்பாளர்களிடம் பேசுகிறாராம் அசின்.

சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள தயாரிப்பாளர் தரப்பு கோரினாலும் அதை உடனே ஏற்றுக் கொண்டு அட்ஜஸ்ட் செய்கிறார்.அதேபோல கறாராக சம்பளத்தை வாங்குவதில்லையாம்.

படப்பிடிப்பின் போதும் ரொம்ப தயாரிப்பாளர்களை கெடுபிடி செய்வதில்லை. கொடுக்கும் வசதிகளை மட்டுமே பயன்படுத்திக்கொள்கிறார். ரொம்ப வசதிகளை எதிர்பார்ப்பது கிடையாது. ஒன்றாக நடிக்கும் நடிகர்ளோடு நல்ல நட்பாகவும் பழகுவதால்அசின் படம் என்றால் யூனிட்டாரும் ரொம்ப சந்தோஷமாக வேலை பார்க்கிறார்களாம்.


அது மட்டுமல்ல, தனது காஸ்ட்யூமர், மேக்கப் மேன், டச்சப் கேர்ள் ஆகியோருக்கு அசினே சம்பளம் கொடுத்து விடுகிறாராம்.அந்த பணத்தைக் கூட தயாரிப்பாளர்களிடமிருந்து கறப்பது கிடையாது.

இந்த காரணங்களுக்காக அசினை புக் செய்வதற்கு தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மத்தியில் ரொம்பவே அடிதடிநடக்கிறதாம். இப்போதைய நிலவரப்படி அசின் கையில் தான் அதிக படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கஜினியில் சூர்யாவுடனும், மஜாவில் விக்ரமுடனும் ஜோடியாக நடித்து வரும் அசின், மஜா படத்தில் கொஞ்சம்கூடுதலாகவே கிளாமர் காட்டி கலக்கி வருகிறாராம்.

நல்லா இருக்கட்டும்!

Read more about: good girl asin

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil