கமலுக்கு 2 ஜோடி ரெடி! கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் கமல் நடிக்கப் போகும் தசாவதாரம் படத்தில் 10 வேடத்தில் கமல் நடிக்கவிருக்கிறார் என்பது பழையசெய்தி. புதுச் செய்தி, அவருக்கு 2 ஜோடிகளை முடிவு செய்துவிட்டார்கள்.தமிழில் இதுவரை யாருமே 10 வேடத்தில் நடித்ததில்லை. நவராத்திரியில் சிவாஜி கணேசன் 9 வேடங்களில் நடித்ததே தமிழ் திரையுலகில்இதுவரை உள்ள சாதனை. அந்தச் சாதனையை முறியடிக்கப் போகிறார் நடிகர் திலகத்தின் கலையுலக வாரிசு கமல்.10 வேடங்களில் கமல் நடித்தாலும் 10 நாயகிகள் கிடையாதாம். மொத்தமே 5 ஜோடிகள்தானாம். மற்ற ஐந்து கமல்களும், சிங்கிள்பெர்சனாகத்தான் வருவார்களாம். 5 கமலுக்கான ஜோடிகளைத் தேடும் பணி தொடங்கி விட்டதாம்.இதில் இப்போதைக்கு 2 பேரை ரெடி செய்து விட்டார்கள். ஒருவர் அசின், இன்னொருவர் வித்யா பாலன். இந்த இரண்டு பேருமே கேரளமங்கைகள். ஆனால் வித்யா பாலன் பாலக்காட்டைச் சேர்ந்த தமிழ் அய்யர்.முதலில் அசினை அணுகியபோது, தயக்கம் காட்டினாராம். ஆனால் அதுவே பெரிய செய்தியாகி, கமல் படத்தில் நடிக்க அசின் மறுத்துவிட்டதாக தகவல் பரவவே, ஆடிப் போன அசின், அய்யோ, நான் கமலோட தீவிர ரசிகையாக்கும் என்று மறுத்தார். முதலில் தயங்கியஅசின் கதையைக் கேட்ட பிறகு இப்போது ஓ.கே சொல்லி விட்டாராம்.இன்றைய இளம் நாயகிகளில் முன்னணியில் இருக்கும் அசின், மூத்த தலைமுறை சூப்பர் ஸ்டார் நடிகர் ஒருவருடன் ஜோடி சேருவது இதுவேமுதல் முறை. அவருக்குக் கடும் போட்டியாக இருக்கும் நயன்தாரா ஏற்கனவே ரஜினியுடனும், சரத்குமாருடனும் நடித்து முடித்து விட்டார்.கமலுடன் நடிக்கப் போகிறார்.இப்போது அசினும் இந்த வரிசையில் சேர்ந்து விட்டார். இப்படத்தில் அசினுக்கு காமடியான வேடம் கொடுக்கப்படவுள்ளதாம்.நகைச்சுவையில் ஸ்கோர் செய்து விடும் கமலுடன் நடிப்பதை எண்ணி இப்போதே டென்ஷனாக உள்ளாராம் அசின்.சரி, அசின், நீங்களும், நயன்தாராவும், கஜினி ஷூட்டிங்கின்போது சரிவர பேசிக் கொள்ளவில்லையாமே என்று அசினிடம் கேட்டபோது,அய்யோ, அப்படியெல்லாம் இல்லை. நானும், அவரும் நல்ல தோழிகள்தான். ஷூட்டிங் ஸ்பாட்டில் நாங்கள் பேசாமல் எல்லாம் இல்லை,அப்படியெல்லாம் வரும் தகவல்கள் டூப்!

By Staff

கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் கமல் நடிக்கப் போகும் தசாவதாரம் படத்தில் 10 வேடத்தில் கமல் நடிக்கவிருக்கிறார் என்பது பழையசெய்தி. புதுச் செய்தி, அவருக்கு 2 ஜோடிகளை முடிவு செய்துவிட்டார்கள்.

தமிழில் இதுவரை யாருமே 10 வேடத்தில் நடித்ததில்லை. நவராத்திரியில் சிவாஜி கணேசன் 9 வேடங்களில் நடித்ததே தமிழ் திரையுலகில்இதுவரை உள்ள சாதனை. அந்தச் சாதனையை முறியடிக்கப் போகிறார் நடிகர் திலகத்தின் கலையுலக வாரிசு கமல்.

10 வேடங்களில் கமல் நடித்தாலும் 10 நாயகிகள் கிடையாதாம். மொத்தமே 5 ஜோடிகள்தானாம். மற்ற ஐந்து கமல்களும், சிங்கிள்பெர்சனாகத்தான் வருவார்களாம். 5 கமலுக்கான ஜோடிகளைத் தேடும் பணி தொடங்கி விட்டதாம்.

இதில் இப்போதைக்கு 2 பேரை ரெடி செய்து விட்டார்கள். ஒருவர் அசின், இன்னொருவர் வித்யா பாலன். இந்த இரண்டு பேருமே கேரளமங்கைகள். ஆனால் வித்யா பாலன் பாலக்காட்டைச் சேர்ந்த தமிழ் அய்யர்.


முதலில் அசினை அணுகியபோது, தயக்கம் காட்டினாராம். ஆனால் அதுவே பெரிய செய்தியாகி, கமல் படத்தில் நடிக்க அசின் மறுத்துவிட்டதாக தகவல் பரவவே, ஆடிப் போன அசின், அய்யோ, நான் கமலோட தீவிர ரசிகையாக்கும் என்று மறுத்தார். முதலில் தயங்கியஅசின் கதையைக் கேட்ட பிறகு இப்போது ஓ.கே சொல்லி விட்டாராம்.

இன்றைய இளம் நாயகிகளில் முன்னணியில் இருக்கும் அசின், மூத்த தலைமுறை சூப்பர் ஸ்டார் நடிகர் ஒருவருடன் ஜோடி சேருவது இதுவேமுதல் முறை. அவருக்குக் கடும் போட்டியாக இருக்கும் நயன்தாரா ஏற்கனவே ரஜினியுடனும், சரத்குமாருடனும் நடித்து முடித்து விட்டார்.கமலுடன் நடிக்கப் போகிறார்.

இப்போது அசினும் இந்த வரிசையில் சேர்ந்து விட்டார். இப்படத்தில் அசினுக்கு காமடியான வேடம் கொடுக்கப்படவுள்ளதாம்.நகைச்சுவையில் ஸ்கோர் செய்து விடும் கமலுடன் நடிப்பதை எண்ணி இப்போதே டென்ஷனாக உள்ளாராம் அசின்.

சரி, அசின், நீங்களும், நயன்தாராவும், கஜினி ஷூட்டிங்கின்போது சரிவர பேசிக் கொள்ளவில்லையாமே என்று அசினிடம் கேட்டபோது,அய்யோ, அப்படியெல்லாம் இல்லை. நானும், அவரும் நல்ல தோழிகள்தான். ஷூட்டிங் ஸ்பாட்டில் நாங்கள் பேசாமல் எல்லாம் இல்லை,அப்படியெல்லாம் வரும் தகவல்கள் டூப்! என்று வேகமாக மறுக்கிறார்.

அவர் என்னதான் மறுத்தாலும், நயன்தாராவும், அசினும் அதிகம் பேசிக் கொள்வதில்லை என்பது கோலிவுட்டின் டாக்!

சரி இன்னொரு ஹீரோயினைப் பார்ப்போம். வித்யா பாலன், திரைப்படங்களுக்குப் புதியவர் அல்ல. ஏற்கனவே ஏகப்பட்ட விளம்பரப்படங்களில் இவரைப் பார்த்திருக்கலாம். 30க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களில் நடித்துள்ளாராம் வித்யா பாலன்.


பாலக்காட்டைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணாக இருந்தாலும், பிறந்து, வளர்ந்தது எல்லாம் மும்பையில்தானாம். எனவே அவரை மும்பைநடிகை என்றே கூறலாம். விளம்பரப் படங்கள் தவிர 3 வீடியோ ஆல்பங்களிலும் அம்மணி அசத்தியுள்ளார்.

விளம்பரம், ஆல்பம் போக, பரினீதா என்ற இந்திப் படத்தில் இவர் நடித்துள்ளார். அதில், இவரது நடிப்புத் திறமையைப் பார்த்துபாலிவுட்டே ஆடிப் போய் விட்டதாம். இதோ வந்து விட்டார் இன்னொரு மதுபாலா, மாதுரி தீக்ஷித் என அங்குள்ள பத்திரிக்கைகள்எழுதித் தள்ளி விட்டனவாம்.

இப்போது இந்திப் பட வாய்ப்புகள் நிறைய வந்தவண்ணம் உள்ளதாம். இந்த சமயத்தில் தசாவதாரம் படத்தில் நடிப்பதற்காக வித்யாபாலனை அணுகியபோது அவர் சந்தோஷத்தின் உச்சிக்கேப் போய் விட்டாராம். காரணம், அவருக்கும் கமல்தான் மனம் கவர்ந்தஹீரோவாம். உடனே ஓ.கே சொல்லி விட்டார்.

வேட்டையாடு விளையாடு படத்தில் இப்போது கமல் பிசியாக உள்ளார். அதற்குள் மற்ற 3 ஹீரோயின்களையும் கண்டுபிடித்து விடுவார்கள்.அதன் பிறகு தசாவதாரம் தொடங்கவுள்ளது.

சும்மாவே கமலுக்கு காதல் மன்னன் என்று பெயர், இதில் 5 ஜோடிகளுடன் புகுந்து விளையாடப் போகிறார். எனவே காதல் சக்கரவர்த்திஎன்று பெயர் மாறினாலும் மாறலாம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X