க்ளீன் போல்ட்.. அசின் வாழ்வில் இப்படி ஒரு இடியா?.. கணவருக்கு இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் இழப்பா?
சென்னை: நடிகை அசின் தமிழ் சினிமாவில் பீக்கில் இருந்தவர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் தனது திறமையை காண்பித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார். அவரது கரியர் ஹிந்தியில் கொஞ்சம் சரிய தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மைக்ரோமேக்ஸ் மொபைலின் உரிமையாளரான ராகுல் ஷர்மாவை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் ராகுல் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்றில் சில விஷயங்களை வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
அசின் தமிழில் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தின் மூலம் அறிமுகமானார் கேரளாவில் பிறந்து வளர்ந்த அசின். ஜெயம் ராஜா இயக்கத்தில் ரவி மோகன் ஹீரோவாக நடித்திருந்த அந்தப் படத்தில் அசின் கதைப்படி கேரள பெண்ணாகவே நடித்து மலையாளம் கலந்த தமிழில் பேசி அசரடித்தார்.முக்கியமாக முதல் படத்திலேயே சொந்தக் குரலில் டப்பிங் பேசி ஆச்சரியப்படுத்தினார். அந்தப் படத்துக்கு பிறகு அசினுக்கு வாய்ப்புகள் மலை போல் குவிந்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டார். இதன் காரணமாக கோலிவுட்டில் அசின் அலை பலமாகவே அடித்தது.
கஜினி அசின்: பெரும்பாலும் ஒரு நடிகருக்குத்தான் தான் நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் ரிலீஸாவது நடக்கும். ஆனால் நடிகைகளில் அரிதாக அசினுக்கு அது நடந்தது. அதாவர் அவர் விஜய்யுடன் நடித்த போக்கிரி, அஜித்துடன் நடித்த ஆழ்வார் ஆகிய இரண்டு படங்களுமே ஒரே நாளில் ரிலீஸாகின. இதற்கிடையே அசினை செம ஃபெர்பார்மராக காட்டிய படம் என்றால் அது கஜினிதான். அதில் தான் ஏற்றிருந்த கல்பனா பாத்திரத்தை மிக அற்புதமாக செய்திருந்தார்.

திருமணம் செய்துகொண்ட அசின்: தமிழில் செம பிஸியாக வலம் வந்துகொண்டிருந்த அசின் பாலிவுட் பக்கம் சென்று அங்கு அமீர் கான், சல்மான் கான், அக்ஷய் குமார் உள்ளிட்டோருடனும் ஜோடி போட்டு நடித்தார். திடீரென அவருக்கு அங்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. நிலைமை இப்படி இருக்க மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான ராகுல் ஷர்மாவை காதலித்து கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் ராகுலின் பேட்டி ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
ராகுல் ஷர்மாவின் பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "எங்களின் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் உலகத்திலேயே முதல் பத்து இடங்களுக்குள் இருக்கும் மொபைல் நிறுவனங்களில் ஒன்றாக இருந்தது. சாம்சங், நோக்கியா நிறுவனங்களின் போட்டியை இந்தியாவில் வெற்றியாக எதிர்கொண்டு 12,000 முதல் 15,000 கோடி ரூபாய்வரை வருவாய் ஈட்டியது. அந்த நிலைமையில்தான் சீன நிறுவனங்கள் வந்தன. அதனால் எங்களது நிலைமை மாறியது. எளிதாக சொல்ல வேண்டுமென்றால், 'பவுன்சர்கள் தொடர்ந்து வந்தன அதற்கு பிறகு க்ளீன் போல்ட் ஆகிவிட்டோம்'. மைக்ரோமேக்ஸுக்கு மட்டும் இது நடக்கவில்லை. உலகளவில் நடந்தது.
வாய்ப்பில்லாமல் போனது: சீன நிறுவனங்களுடன் மட்டும் சீன உற்பத்தியாளர்கள் ஒப்பந்தம் செய்தார்கள். இதனால் புதிய பரிசோதனைகளுக்கு வாய்ப்பில்லாமல் அமைந்துவிட்டது. இருந்தும் இரண்டு வருடங்கள் முயற்சி செய்தோம். ஒருகட்டத்தில் மேலும் முதலீடு செய்தால் அதில் எந்த அர்த்தமும் இல்லை என தோன்றியது. போட்டியாளர்களுக்கு நிதி அதிகளவில் கிடைத்தது. ஆனால் நாம் பணத்தை வீணாக்கக்கூடாது என்று உணர்ந்துகொண்டோம்.
நாங்கள் செய்த தவறு?: 2014ஆம் ஆண்டு எங்களுக்கு வந்த 800 மில்லியன் டாலர் நிதியுதவியை நிராகரித்தது தவறாக இருக்கலாம். அப்போது பின்லாந்து, கொரிய நிறுவனங்களைத்தான் எதிர்கொண்டோம். சீன நிறுவனங்களால் முடியாது என்றுதான் நினைத்தோம். ஆனால் அந்த நிறுவனங்கள் முழு பலத்துடன் இருந்தார்கள். பிறகு நாங்கள் கட்டுமான துறைக்கு மாறினோம். இப்போது முன்பைவிட நாங்கள் அதிகம் சம்பாதிப்பது பலருக்கும் தெரியாது" என்றார்.


Click it and Unblock the Notifications











