அசினுக்கு குழந்தை பிறந்தபோது அந்த நடிகர் என்ன செய்தார் தெரியுமா?.. கணவர் சொன்ன சீக்ரெட்

மும்பை: அசின் கோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து பிறகு பாலிவுட்டிலும் தடம் பதித்தவர். தனது கரியர் பீக்கில் இருக்கும்போதே தொழிலதிபர் ராகுல் ஷர்மாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அந்தத் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறார். அதற்கு பிறகு சினிமாவிலிருந்து மொத்தமாகவே ஒதுங்கிவிட்டார். இதற்கிடையே இருவரும் விவாகரத்து செய்யவிருப்பதாக ஒரு தகவல் வெளியானது. இந்தச் சூழலில் அசினின் கணவர் பேசியிருக்கும் விஷயம் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட அசின் தமிழில் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தின் மூலம் அறிமுகமானார். ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த அந்தப் படத்தில் அசின் கதைப்படி கேரள பெண்ணாகவே நடித்து மலையாளம் கலந்த தமிழில் பேசி அசரடித்தார்.முக்கியமாக முதல் படத்திலேயே சொந்தக் குரலில் டப்பிங் பேசி ஆச்சரியப்படுத்தினார்.

Asin s husband Rahul Sharma talking about Akshay Kumar has become a trend

டாப் நடிகை: அந்தப் படத்துக்கு பிறகு அசினுக்கு வாய்ப்புகள் மலை போல் குவிந்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டார். இதன் காரணமாக கோலிவுட்டில் அசின் அலை பலமாகவே அடித்தது. முக்கியமாக அசினிடம் அழகு மட்டும் இல்லை திறமையும் இருக்கிறது என்பதை அவரது நடிப்பு பலமாகவே உணர்த்தியது.

கஜினி: பெரும்பாலும் ஒரு நடிகருக்குத்தான் தான் நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் ரிலீஸாவது நடக்கும். ஆனால் நடிகைகளில் அரிதாக அசினுக்கு அது நடந்தது. விஜய்யுடன் நடித்த போக்கிரி, அஜித்துடன் நடித்த ஆழ்வார் ஆகிய இரண்டு படங்களுமே ஒரே நாளில் ரிலீஸாகின. இதற்கிடையே அசினை செம ஃபெர்பார்மராக காட்டிய படம் என்றால் அது கஜினிதான். அதில் அவர் ஏற்றிருந்த கல்பனா கதாபாத்திரத்தை இன்றுவரை ரசிகர்கள் மறக்காமல் கொண்டாடிவருகின்றனர்.

பாலிவுட் டூ திருமணம்: தமிழில் செம பிஸியாக வலம் வந்துகொண்டிருந்த அசின் பாலிவுட் பக்கம் சென்று அங்கு அமீர் கான், சல்மான் கான், அக்‌ஷய் குமார் உள்ளிட்டோருடனும் ஜோடி போட்டு நடித்தார். ஆனால் தன்னுடைய கரியர் பீக்கில் இருந்தபோதே மைக்ரோமேக்ஸ் CEO ராகுல் ஷர்மாவை காதலித்து திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார். அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.

சறுக்கிய அசின்: கோலிவுட்டிலிருந்து ஏற்கனவே ஸ்ரீதேவி உள்ளிட்ட நடிகைகள் பாலிவுட் சென்று வெற்றிக்கொடியை நாட்டினர். அவர்களுக்கு பிறகு நடிகை அசின் அந்தப் பெருமையை பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றபடிதான் அவருக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அவர் நடித்த ஹிந்தி படங்கள் சரியாக ஓடவில்லை. அவர் நடிப்பில் வெளியான ஹவுஸ்ஃபுல், ரெடி, போல் பச்சான், கில்லாடி 786 ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தரவில்லை. இதனையடுத்து

ராகுல் ஷர்மா பேச்சு: இந்நிலையில் விழா ஒன்றில் கலந்துகொண்ட அசினின் கணவர் ராகுல் ஷர்மா பேசுகையில், "எனது மகள் பிறக்கும் நேரத்தில் அக்‌ஷய் குமார் எனக்கு அடிக்கடி ஃபோன் செய்து குழந்தை பிறந்தவுடன் கண்டிப்பாக சொல்லுங்கள் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். குழந்தை பிறந்ததும் அவருக்குதான் முதலி ஃபோன் செய்தேன். ஃபோன் செய்து, 'பிரதர் ஒரு நல்ல செய்தி என்று சொன்னேன்.அதற்கு அவர் ஃபெண்டாஸ்டிக் என்று சொன்னார். அசினுக்கு குழந்தை பிறந்தால் உடனே கொச்சிக்கு வரவேண்டும் என்று முடிவு செய்து அவர் விமானத்தை தயாராக வித்திருந்தார். எனது குடும்பத்தினர் வரும் முன்னரே அவர் வந்து சேர்ந்துவிடார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X