எங்க வந்து என்ன கேட்கிறீங்க: செய்தியாளர்களை கேட்ட நடிகை ப்ரீத்தி ஜிந்தா
மும்பை: மும்பையில் நடந்து வரும் மாமி திரைப்பட விழாவிற்கு வந்த நடிகை ப்ரீத்தி ஜிந்தாவிடம் பத்திரிக்கையாளர்கள் பாலியல் தொந்தரவு வழக்கு குறித்து கேட்டனர்.
16வது மாமி திரைப்பட விழா கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மும்பையில் துவங்கியது. இந்த விழா வரும் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் ஐஸ்வர்யா ராய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
விழாவில் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவும் கலந்து கொண்டார்.

நெஸ் வாடியா
ப்ரீத்தியை பார்த்த பத்திரிக்கையாளர்கள் அவர் தனது முன்னாள் காதலர் நெஸ் வாடியா மீது அளித்த பாலியல் புகார் வழக்கின் முன்னேற்றங்கள் பற்றி கேட்டனர்.

ப்ரீத்தி
இது திரைப்பட விழா. அதற்கு தான் நாம் இங்கு வந்துள்ளோம். அதை விட்டுவிட்டு வேறு ஏதாவது பற்றி கேள்வி கேட்காதீர்கள் என்றார் ப்ரீத்தி.

போலீஸ்
உங்களுக்கு நான் அளித்த புகார் குறித்த முன்னேற்றம் பற்றி தெரிய வேண்டும் என்றால் மும்பை போலீசாரிடம் கேளுங்கள். நானும் அது குறித்து தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளேன் என்று ப்ரீத்தி கூறினார்.

சயிப் அலி கான்
சயிப் அலி கான் என் நண்பர். அவர் கேட்டுக் கொண்டதால் ஹேப்பி என்டிங் படத்தில் நடித்தேன். ட்ரெய்லரில் நான் வந்ததை பார்த்து ஆச்சரியப்பட்டேன் என்று ப்ரீத்தி தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











