Don't Miss!
- Automobiles
இந்தியாவின் விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய கங்கனா ரனாவத்.. நாட்டுல இந்த காரை கொஞ்சம் பேருதான் யூஸ் பண்றாங்க!
- News
லடாக்கில் பாலம்..ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி...சீனா சொந்தம் கொண்டாடுவதை ஏற்கமாட்டோம் - அரிந்தம் பக்சி
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு உடல்நிலை பலவீனமாக இருக்கும்..
- Finance
ரூ.2,396 கோடி நட்டம்.. சில்லறை முதலீட்டாளர்களைப் பயமுறுத்திய பேடிஎம் காலாண்டு முடிவுகள்!
- Sports
அஸ்வின் கொடுத்த அதிர்ச்சி.. ஆடிப்போய் நின்ற தோனி.. ராஜஸ்தானிடம் சிஎஸ்கே தோற்றது எப்படி?
- Technology
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோ ஜி42: சாதனம் இப்படியும் இருக்கலாம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நயன்தாராவின் திருமண வாழ்க்கை இப்படி தான் இருக்கும்...அடித்து சொல்லும் ஜோதிடர்
சென்னை : நயன்தாரா உள்ளிட்ட டாப் திரையுலக பிரபலங்களின் திருமணம் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது பற்றிய பிரபல ஜோதிடர் ஒருவர் கணித்து சொல்லி இருக்கும் தகவல் திரையுலகையே அதிர வைத்துள்ளது.
கோலிவுட்டில் கடந்த சில நாட்களாக ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருவது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் டைரக்டர் விக்னேஷ் சிவன் திருமணம் பற்றியது தான். இவர்களின் திருமண தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே பல விதமான கிசுகிசுக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ப்பா..
போஸ்டரே
வெறித்தனமா
இருக்கு..
விக்ரம்
ஃபர்ஸ்ட்
சிங்கிள்
எப்படி
இருக்கப்
போகுதோ?

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்
பல வருடங்களாக அனைவரும் கேட்டு வந்த நிலையில் ஒரு வழியாக சமீபத்தில் தான் தங்களின் திருமண தேதியை நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஜோடி அறிவித்துள்ளது. ஜுன் 9 ம் தேதி திருப்பதியில் நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமணம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு பிறகு சில கால பிரேக்கிற்கு பிறகு இருவரும் சினிமா வேலைகளில் மீண்டும் பிஸியாக உள்ளதாக கூறப்படுகிறது.

பிரபலங்களின் ஜோதிடர்
இந்த சமயத்தில் நயன்தாரா மட்டுமல்ல அவரை போன்ற பல பிரபலங்களின் திருமண வாழ்க்கை, சினிமா எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்பது பற்றி பிரபல ஜோதிடர் வேணுசாமி கணித்து சொல்லி உள்ளார். பிரபலங்களின் ஜாதகங்களை கணித்து சொல்வதன் மூலம் திரையுலகிலும், பத்திரிக்கை உலகிலும் பிரபலமானவராக இருக்கக் கூடியவர் தான் வேணுசாமி.

இப்போ என்ன சொல்லி இருக்கார்
இவர் லேட்டஸ்டாக நயன்தாரா, பாகுபலி நாயகி அனுஷ்கா ஷெட்டி, புஷ்பா ஹீரோயின் ராஷ்மிகா மந்தனா, நடிகர் பிரபாஸின் திருமண வாழ்க்கை பற்றி கணித்து சொல்லி உள்ள தகவல் சோஷியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது. அவர் அப்படி என்ன கூறினார் என்றால், நயன்தாரா, அனுஷ்கா, ராஷ்மிகா ஆகியோரின் திருமண வாழ்க்கை வெற்றியானதாக இருக்காதாம்.

அச்சச்சோ என்ன சொல்றீங்க
திருமணத்திற்கு பிறகு இந்த நடிகைகள் தங்களின் திருமண வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்குமாம். அதனால் இவர்களின் திருமண வாழ்க்கை தோல்வியில் தான் முடியும். நீண்ட காலம் திருமண உறவு நீடிக்காதாம். இந்த தகவல் திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும், சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

நயன்தாரா போடும் கன்டிஷன்
தமிழ், தெலுங்கு, இந்தி என பிஸியாக நடித்து வரும் நயன்தாரா, படங்களின் ப்ரொமோஷன்களில் பங்கேற்க மாட்டேன் என் கன்டிஷனோடு தான் ஒவ்வொரு படத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் போட்டு வருகிறார். இருந்தாலும் இவருக்கு ரசிகர்கள் இடையே இருக்கும் பெரும் வரவேற்பு காரணமாக பல ஹீரோக்கள், பட தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் உள்ளிட்டோர் நயன்தாராவையே தங்கள் படங்களில் நடிக்க வைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இவங்க வாழ்க்கை இப்படி தான்
நயன்தாரா, ராஷ்மிகா, அனுஷ்கா ஆகியோரின் ஜாதகங்களில் குரு வலுவிழந்து காணப்படுகிறாராம். சமீபத்தில் விவாகரத்தான சமந்தாவின் ஜாதகத்திலும் குரு வலுவிழந்து தான் உள்ளாராம். இந்த நடிகைகள் மட்டுமல்ல நடிகர் பிரபாசுக்கும் திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்படுமாம்.

அட என்னங்க சொல்றீங்க
அது மட்டுமல்ல 2024ம் ஆண்டிற்குள் நயன்தாரா, சமந்தா, பூஜா ஹெக்டே, ராஷ்மிகா ஆகியோரின் திரையுலக வாழ்க்கையும் முடிவுக்கு வந்து விடுமாம். அடுத்த 2 ஆண்டுகளில் இவர்கள் சினிமாவை விட்டே காணாமல் போய் விடுவார்கள் என வேணுசாமி கணித்திருப்பது அனைவருக்கும் பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.