»   »  கிளாமருக்கும் ரெடி-அதிசயா

கிளாமருக்கும் ரெடி-அதிசயா

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்க கிளாமர் காட்டினால்தான் ஆச்சு என்ற நிலை வந்தால் அதற்கும் தான் தயார் என அதிசயா ஜில்லாக கூறுகிறார்.

வட்டாரம் படத்தில் வந்து போனவர்தான் நம்ம அதிசயா. சுத்தமான தமிழ்ப் பொண்ணாம், தஞ்சாவூர்தான் பிறந்த பூமியாம். இப்போது ரசிகர்களைக் கிறங்கவைப்பதற்காக கோலிவுட்டில் கால் பதித்துள்ளார்.

வட்டாரம் படம் சூப்பர் ஹிட் ஆகவே, அதிசயாவும் கவனிக்கப்பட்டார். முதல் படமே இரட்டை ஹீரோயின் என்பதால் அதிசயாவுக்கு எந்த வருத்தமும் இல்லையாம்.இப்போது அதிசயா கையில் காலைப் பனி உள்ளது. அதாவது, அந்தப் பெயரில் புதிய படத்தில் நடித்து வருகிறார் அதிசயா.

அது சரி அதிசயா, கிளாமர் போட்டி கடுமையாக இருக்கிறதே, நீங்க எப்படி என்று வம்புக்கு இழுத்தோம். நானும் ரெடிதான், கிளாமர் காட்டினால்தான் நிலைக்கமுடியும் என்ற நிலை வந்தால் நான் அதற்கும் ரெடியாகத்தான் இருக்கிறேன் என்று நமக்கே அல்வா காட்டினார்.

தமிழ் சினிமாவில் பெரிய ரவுண்டு வர ஆசையாம் அதிசயாவுக்கு. எல்லா ஹீரோக்களுடன் (பெருசுகளுக்கு மட்டும் ஸாரி!) ஒரு ரவுண்டு நடித்து முடித்து விடவிறுவிறுப்பாக உள்ளாராம்.

அதிசயாவின் இந்த பிரமிப்பு வளர்ச்சிக்கு அவருடைய அம்மாதான் காரணமாம் (அதென்னவோ பெரும்பாலான நடிகைகளுக்கு அவங்க அம்மாக்கள்தான்வினையூக்கியாக இருக்கிறார்கள்!). அவர்தான் எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்து அதிசயாவை தேத்தினாராம்.

மாடலிங்கிலும் அம்மாதான் இறக்கி விட்டாராம். அப்படித்தான் கடந்த ஆண்டு மிஸ் சென்னை போட்டியில் பங்கேற்றபோது அதிசயாவைப் பார்த்து அசந்து போனசரண், தனது வட்டாரம் படத்தில் அதிசயாவை திறமை காட்ட வைத்தார்.

இடையில் கிடைத்த ஒரு கேப்பைப் பயன்படுத்தி பி.ஏ. இலக்கியம், சென்னை பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் சேர்ந்து விட்டாராம். படித்துக் கொண்டேநடிப்பையும் ஒரு கை பார்க்கப் போகிறாராம்

தமிழ் சினிமாவின் நெளிவு சுளிவுகளை ஓரளவுக்கு தெரிந்து கொண்டுள்ளாராம் அதிசயா. அதை வைத்து அடுத்தடுத்து அட்டாக் பண்ணப் போகிறேன், பாருங்கள்என்று குறும்பாக சிரித்து நம்மை மருள வைக்கிறார்.

தேவைப்பட்டால் கிளாமர், இல்லாட்டி ஆக்ஷன், மொத்தத்தில் எப்படின்னாலும் ரெடி என்று விரலைச் சுண்டி விஸ்தீரணமாக ஒரு சிரிப்பைச் சிந்துகிறார் அதிசயா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil