»   »  அதிசயா.. அதிசயா..

அதிசயா.. அதிசயா..

Posted By:
Subscribe to Oneindia Tamil

அழகிய அதிசயா, வசீகரிக்க வைக்கிறார், பேச்சிலும், தோற்றத்திலும். அச்சு வெல்லத் தொண்டைக்காரியானஅதிசயா, பேசினாலே குயில் பாடுவது போல குதூகலிக்க வைக்கிறது.

நல்லாருக்கே உங்க வாய்ஸ் என்று கேட்டால் இது பாட்டி கொடுத்த கிப்ட் என்று கூறி புஷ்பம் போலபுன்னகைக்கிறார் அதிசயா. அச்சு அசல் தமிழ்ப் பொண்ணாம் அதிசயா. தஞ்சாவூர்தான் பூர்வீகம். அப்பா ஹரிதீர்த்தம். அவருக்கு சொந்த ஊர் திருத்துறைப்பூண்டி. அப்பாவுக்கும், அம்மாவுக்கும் வங்கிப் பணி என்பதால்பல்வேறு ஊர்களுக்கும் போக வேண்டியிருந்ததாம்.

பல ஊர்களைப் பார்த்ததால் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் நிறைய பாஷைகள் தெரியுமாம். அதிசயாவின்பாட்டிக்கும் நிறைய மொழிகள் தெரியும். பாட்டிதான் எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷன் என்று சொல்லும் அதிசயா,அவரது சாயல் என்னிடம் அதிகம் உண்டு என்கிறார். (ஆனா நீங்க பார்க்க பாட்டி மாதிரி இல்லையே).அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டாராம்.

எப்படி நடிக்க வந்தீங்க அதிசயா? நான் மிஸ் சென்னை ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவள். எனது புகைப்படம் பலபத்திரிகைகளிலும் வந்ததால், எனது அழகான கத்தைப் பார்த்து பலரும் என்னை அணுகினர். நடிக்க வாங்க என்றுவற்புறுத்தினர்.

இருந்தாலும் பிரபலமான, வெயிட்டான ஒரு இயக்குனர் மூலம் அறிமுகமாக ஆசைப்பட்டேன். அதற்காககாத்திருந்தேன். அப்படிக் கிடைத்த வாய்ப்புதான் வட்டாரம் படம்.

இந்த படத்தோட யூனிட்டே என்னை மிகவும் கவர்ந்து விட்டது. மிக அழகாக திட்டமிடு வேலை பார்க்கிறார்சரண். எனக்கு 2வது ஹீரோயின் ரோல் என்றாலும் கூட எனது கேரக்டரை மிக அழகாக செதுக்கி, எனக்குப்பெயரை வாங்கிக் கொடுத்தார்.

அது மட்டுமா, என்னை உற்சாகப்படுத்தி நல்லா வேலை வாங்கினார் (பெண்டு கழன்டுடுத்தோ!). எனது இனியகுரலைப் பாராட்டிய அவர், நீயே டப்பிங் பேசும்மா என்று தட்டிக் கொடுத்து உற்சாகமாக சொன்னார் என்றுபெருமைப்படுகிறார் அதிசயா.

உங்க குரல் வளத்தின் ரகசியம் என்னவோ? எனது குரல் அப்படியே எனது பாட்டியின் குரல்தான். அவங்களுக்ருஅருமையான குரல், நல்லா பாடுவாங்க, ஸ்டைலிஷா பாடுவாங்க. அவங்களைப் பார்த்துத்தான் எனக்கும் நல்லகுரல் வளம் வந்ததோ என்னவோ, நானும் நல்லாப் பாடுவேன் தெரியுமோ என்று வாய்ஸ் பேக்கிரவுண்டைவிளக்குகிறார்.

நடிக்க வருவதற்கு முன்பு எல்லா அழகிகளையும் போலவே, அதிசயாவும், மாடலிங் பக்கம் முயற்சித்துள்ளார்.அதில் ஓரளவு வெற்றியும் கிடைத்ததாம். அப்போது பார்த்து வட்டாரம் வந்து விட சினிமாவுக்கு வந்து விட்டார்.

வட்டாரம் படத்தில் நான் நன்றாக நடித்திருப்பதாக எல்லோரும் பாராட்டுகிறார்கள். நிறையப் புதிய படவாய்ப்புகளும் வந்துள்ளன. ஆனால் நல்ல கேரக்டர்களாக தேர்வு செய்து நடிக்க வேண்டும், நல்ல பெயர் எடுக்கவேண்டும்.

இதனால் குடும்பப் பாங்கான ரோல்ஸ் மட்டும்தான் செய்வார் என்று தப்புக் கணக்குப் போட்டு விடவேண்டாமாம். மேடத்திற்கு வெஸ்டர்ன் டான்ஸ் அட்டகாசமாகத் தெரியுமாம். ஆட ஆரம்பித்தால் அடி பின்னிவிடுவாராம். எனவே மாடர்ன் பொண்ணு கேரக்டரிலும் துள்ளி விளையாடுவாராம்.

இதுதவிர பாட்டு எழுதுவாராம், கதை எழுதுவாராம், நன்னா சமைப்பாராம், தோட்ட பராமரிப்பு, டிரஸ் மேக்கிஹ்என ஏகப்பட்ட சமாச்சாரங்கள் அம்மணிக்குத் தெரியுமாம். ஒரு குட்டி சகலகலாவல்லியாக இருக்கிறாராம்இப்போதே.

நாம நடிக்கிறோமோ இல்லையோ, உடம்பை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும். உடம்பு ஃபிட் ஆகஇருந்தால்தான் சகலமும் சந்தோஷமாக இருக்கும். அதனால் நான் தினசரி உடற்பயிற்சியை தவறாமல்செய்கிறேன் என்கிறார். யோகா கூட தெரியுமாம்.

அதிசயாவுக்கு பிடித்த நடிகை யார் தெரியுமா? இந்திய அதிசயம் ஐஸ்வர்யா ராய்தானாம். அவர் அளவுக்குஉலகப் புகழ் பெறனும் என்று ஆசையாக உள்ளதாம்.

சிலரை ஆட விட்டுப் பார்த்தால் நல்லாருக்கும். ஆனால் அதிசயாவை பேச விட்டுக் கேட்டால்தான் சொகம்!!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil