மஞ்சள் புடவையில் மகாலட்சுமி போல ஜொலிக்கும் அதுல்யா ரவி!

சென்னை : நடிகை அதுல்யா ரவி முதல்முறையாக சாந்தனு பாக்யராஜ் உடன் இணைந்து நடித்துள்ள முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

ஜெய்க்கு ஜோடியாக ஏற்கனவே கேப்மாரி திரைப்படத்தில் நடித்து இருந்தார். இப்பொழுது எண்ணித் துணிக திரைப்படத்தில் இரண்டாவது முறையாக ஜோடி சேர்கிறார்.

க்யூட்டான நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ள இவர் இப்பொழுது மஞ்சள் புடவையில் மகாலட்சுமி போல ஜொலிக்கும் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிகிறது.

படத்திற்கு படம் வித்தியாசம்

படத்திற்கு படம் வித்தியாசம்

எந்த ஒரு திரை பின்புலமும் இல்லாமல் தமிழ் சினிமாவில் வெற்றிகரமான கதாநாயகியாக ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகை அதுல்யா ரவி நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களும் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. ஒவ்வொரு திரைப்படங்களிலும் வித்தியாச வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அதுல்யாவின் கெமிஸ்ட்ரி

அதுல்யாவின் கெமிஸ்ட்ரி

இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய்யின் 25வது திரைப்படமாக வெளியானது கேப்மாரி. இதில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக வைத்து க்யூட்டாக மட்டும் இல்லாமல் கவர்ச்சியாகவும் தன்னால் நடிக்க முடியும் என நிரூபித்துக் காட்டி இருந்தார். கேப்மாரி யில் ஜெய் அதுல்யாவின் கெமிஸ்ட்ரி மிக நன்றாகவே ஒர்க்கவுட்டாகி இருக்க இப்போது இந்த ஜோடி 2-வது முறையாக இணைகிறது. ஆக்ஷன் திரில்லர் திரைக் களத்தில் உருவாகியுள்ள எண்ணித் துணிக திரைப்படத்தில் ஜெய் மற்றும் அதுல்யா இணைந்து நடித்துள்ளனர்.

கலகலப்பான குடும்பப் படத்தில்

கலகலப்பான குடும்பப் படத்தில்

ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் போதே முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் கதாபாத்திரத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த இளம் நடிகராக உயர்ந்து வரும் சாந்தனு பாக்யராஜ் இப்பொழுது முருங்கைக்காய் சிப்ஸ் என்ற கலகலப்பான குடும்ப படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். பாக்யராஜ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்க சாந்தனு பாக்யராஜுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர், டீசர், பாடல்கள் என அனைத்தும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது மிக விரைவிலேயே படமும் வெளியாக உள்ளது.

மஞ்சள் சேலையில் மகாலட்சுமி

மஞ்சள் சேலையில் மகாலட்சுமி

இப்போதைக்கு தமிழ் சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வரும் இவர் மற்ற மொழிகளில் எந்த படங்களிலும் ஒப்பந்தமாகவில்லை. எனவே தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மஞ்சள் ஸ்லீவ்லெஸ் சேலையில் மகாலட்சுமி போல ஜொலிக்கும் புகைப்படத்தை பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X