நாய் குட்டியுடன் காதலர் தினம் கொண்டாடிய அதுல்யா..குவியும் லைக்குகள் !
சென்னை : நடிகை அதுல்யா ரவி காதலர் தினத்தில் புதிதாக வாங்கிய நாய்க்குட்டியை அறிமுகப்படுத்தியுள்ளார்.
சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தில் அதுல்யா கதாநாயகியாக நடித்து இருக்க அந்த படத்திலிருந்து ஏதோ சொல்ல பாடல் ப்ரோமோ நேற்று வெளியிடப்பட்டது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் நடித்து வரும் அதுல்யா ரவி நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு புதிதாக வாங்கியுள்ள பப்பி குட்டியின் புகைப்படத்தை அறிமுகப்படுத்தி லைக்குகளை அள்ளி வருகிறார்.

வட்டம்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ள அதுல்யா ரவி சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அனைவரும் விரும்பும் இளம் நாயகிகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் இப்போது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் இதில் சிபிராஜ் ஹீரோவாக நடித்து வர படத்திற்கு வட்டம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் நிக்கிகல்ராணி,ஆண்ட்ரியா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

ப்ரோமோ காட்சிகள்
மாஸ்டர்,பாவ கதைகள் ஆகிய படங்களை தொடர்ந்து சாந்தனு பாக்யராஜ் இப்போது நடித்து வரும் முருங்கைக்காய் சிப்ஸ் கலகலப்பான குடும்பம் திரைப்படமாக உருவாகி வரும் நிலையில் முதல்முறையாக அதுல்யா ரவியுடன் ஜோடி சேர்ந்து இருக்க இளமை ததும்பும் காதல் திரைப்படமாக இருக்கும் என நம்பப்படும் நிலையில் நேற்று பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு படத்திலிருந்து ஏதோ சொல்ல பாடலின் ப்ரோமோ காட்சிகள் வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது.

பார்க்க முடியாத அளவிற்கு
இதுவரை கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த அதுல்யா ரவி இனி கவர்ச்சி காட்டும் கதாபாத்திரங்களுக்கும் பச்சைக்கொடி காட்டி இருக்க அடுத்தடுத்து வரும் படங்களில் கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும் என தெரிகிறது. ஜெயின் 25வது திரைப்படமாக வெளியான கேப்மாரியில் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு கவர்ச்சியில் அதகளம் செய்து இருந்தார்.

பச்சை பாவாடை தாவணியில்
நேற்று காதலர் தினம் உலகம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வந்த நிலையில் பலரும் தங்களது காதலர்கள் உடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு வர நடிகை அதுல்யா மட்டும் புதிதாக வாங்கியுள்ள பப்பி குட்டியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பச்சை பாவாடை தாவணியில் தலை நிறைய மல்லிகை பூவுடன் முகத்தில் புன்னகையுடன் குட்டி பப்பியுடன் காதலர் தினத்தை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்ட இந்த க்யூட்டான புகைப்படங்கள் இப்பொழுது லைக்குகளை அள்ளுகிறது.


Click it and Unblock the Notifications











