நாங்களும் டோலிவுட் போவோம்ல.. கோவை பொண்ணு அதுல்யா ரவியின் அசத்தலான அடுத்த பட அப்டேட்!

சென்னை: கோலிவுட்டின் இளம் புயலாக அசத்தி வரும் அதுல்யா ரவி டோலிவுட்டில் அறிமுகமாகப் போகிறாராம்.

சமீப காலமாக கோலிவுட் நடிகர்களின் அடுத்த கட்ட டார்கெட்டாக டோலிவுட் இருந்து வருகிறது.

டோலிவுட் ஹீரோயின் எல்லாம் தமிழ் சினிமாவில் நடித்து வரும் போது இங்கிருந்து ஹீரோயின்கள் அங்கே போகக் கூடாதா என்ன? என்கிற கேள்வியுடன் ஆந்திரா மற்றும் தெலங்கானா ரசிகர்களை கவர்ச்சியில் கிறங்கடிக்க களமிறங்கப் போகிறார் அதுல்யா ரவி.

கோவை பொண்ணு

கோவை பொண்ணு

கோவை பொண்ணான அதுல்யா ரவி 'பால்வாடி காதல்' குறும்படம் மூலமாக நடிகையாக மாறினார். 2017ம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார். கதாநாயகம், ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், சுட்டுப் பிடிக்க உத்தரவு, நாடோடிகள் 2, அடுத்த சாட்டை, கேப்மாரி, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

கவர்ச்சி தூக்கலாக

கவர்ச்சி தூக்கலாக

ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதைகளில் நடித்து வந்த அதுல்யா ரவி தனது ரூட்டை கிளாமர் பக்கம் அப்படியே திருப்பினார். எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான கேப்மாரி மற்றும் சமீபத்தில் சாந்தனு மற்றும் பாக்கியராஜ் நடிப்பில் வெளியான முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி தூக்கலாக நடித்து ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார்.

ஏகப்பட்ட ரசிகர்கள்

ஏகப்பட்ட ரசிகர்கள்

சமூக வலைதளங்களில் இவர் புகைப்படங்களை வெளியிட்டாலே அது தனியாக டிரெண்டாகி விடும். அந்த அளவுக்கு நடிகை அதுல்யா ரவிக்கு ஏகப்பட்ட சோஷியல் மீடியா ஃபாலோயர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் இவரை 2.1 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். அடிக்கடி ரசிகர்களுக்காக புதிய புதிய போட்டோஷூட்களை நடத்தி போஸ்ட்களை போட்டு வருகிறார்.

டோலிவுட் என்ட்ரி

டோலிவுட் என்ட்ரி

புஷ்பா படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ரமேஷ் கடுரி இயக்கத்தில் கிரண் அப்பாவராம் நடிப்பில் உருவாக உள்ள புதிய தெலுங்கு படத்தில் தற்போது ஒப்பந்தமாகி உள்ளார் நடிகை அதுல்யா ரவி. இதுதொடர்பான அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள நிலையில், கோலிவுட் ரசிகர்களும் டோலிவுட் ரசிகர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

போலீஸ் படம்

போலீஸ் படம்

இயக்குநர் ரமேஷ் கடுரி இதுதொடர்பாக அளித்த பேட்டியில், தனது காப் ஸ்டோரி கதைக்கு அதுல்யா ரவி கச்சிதமாக பொருந்தி போவார் என உணர்ந்த நிலையில், அவரை அழைத்து ஸ்க்ரீன் டெஸ்ட் செய்தோம். அவரது எக்ஸ்பிரஷன் நான் நினைத்ததை விட கச்சிதமாக கதைக்கு பொருந்தி போனதால் அவரை இந்த படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளேன் எனக் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X