சோடாபுட்டி கண்ணாடி, பெல்பாட்டம் பேண்ட்... அதுல்யா மேட்சிங் பிரமாதம்!
சென்னை : நாடோடிகள் 2, கேப்மாரி ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்பொழுது முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் நடித்து வருகிறார் நடிகை அதுல்யா.
சாந்தனு பாக்யராஜ். உடன் முதல் முறையாக இணைந்து நடித்திருக்கும் இந்த படத்தில் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது.
சேலை மாடர்ன் டிரஸ் என எது போட்டாலும் செம க்யூட்டாக இருக்கும் அதுல்யா இப்பொழுது அந்த காலத்து பெல்பாட்டம் பேண்ட் மற்றும் சோடா புட்டி கண்ணாடி உடன் செம கியூட்டாக ரசிகர்களை சிலிர்க்க வைத்துள்ளார்.

அதுல்யா
கோலிவுட்டில் விறுவிறு வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் நடிகை அதுல்யா தொடர்ந்து குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டார். இப்பொழுது கவர்ச்சிக்கும் பச்சைக்கொடி காட்டி ரசிகர்களை சுண்டி இழுக்கும் தாராள கவர்ச்சியை வஞ்சனையில்லாமல் காட்டி வருகிறார்.

முருங்கைக்காய் சிப்ஸ்
கேப்மாரி, நாடோடிகள் 2 ஆகிய படங்களை தொடர்ந்து அடுத்து சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் முருங்கைக்காய் சிப்ஸ்-ல் ஹீரோயினாக நடித்து வருகிறார். லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் நடிகர் பாக்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டு இரண்டுமே சூப்பர் ஹிட்டாகி இணையதளத்தை கலக்கி கொண்டுள்ளது.

அட்டகாசமான த்ரில்லர்
புதுமுக இயக்குனர் எஸ் கே வெற்றிச்செல்வன் இயக்கத்தில் மீண்டும் ஜெய்யுடன் இணைந்து "எண்ணித் துணிக" என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு 2019 இல் தொடங்கப்பட்டது. இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் எண்ணித் துணிக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பட்டையை கிளப்பியது. அட்டகாசமான த்ரில்லர் படமாக இப்படம் உருவாகி வருகிறது.
Recommended Video

சோடாபுட்டி கண்ணாடி
இவ்வாறு கோலிவுட்டில் பரபரப்பாக நடித்து வரும் நடிகை அதுல்யா சமூக வலைத்தளங்களையும் விட்டு வைப்பதில்லை. செம ஆக்டிவாக எப்போதும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வரும் இவர் இதுவரை சேலை மற்றும் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து லைக்குகளை அள்ளி வர இப்பொழுது அந்த காலத்து பெல்பாட்டம் பேண்ட் மற்றும் சோடாபுட்டி கண்ணாடி என தாறுமாறான மேட்சிங்கில் அதுல்யா வெளியிட்டுள்ள செம க்யூட்டான புகைப்படங்கள் இணையதளத்தை ஆர்ப்பரித்து வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











