வயலில் ஓடிவரும் அதுல்யா.. அலப்பறைகள் தாங்க முடியலப்பா!
சென்னை : அதுல்யா ரவி புதிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
அதுல்யா கொரன்டைன் நேரத்தை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேலைகளை செய்து பொழுதுபோக்கி நாட்களை கடத்தி வருகிறார். தான் செய்யும் குறும்புத்தமான விஷயங்களை வீடியோ பதிவாக எடுத்து அதையும் தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவேற்றி ரசிகர்களை இத்தனை நாட்கள் உற்சாக படுத்தி வந்தார் .

அதுல்யா சில நாட்களுக்கு முன் எடுத்த காணொளியை பதிவேற்றியுள்ளார். இதில் 80 மற்றும் 90களில் பெரும்பாலுமான படத்தின் ஹீரோயின் அறிமுக காட்சிகள் இப்படி தான் இருந்திருக்கும் நல்ல பசுமையான விவசாய நிலங்களின் இடையில் புன்னகைத்த படி படத்தின் நாயகி ரசிகர்களை பார்த்து சிரித்த படி ஓடி வந்து அறிமுகமாவார் .
அந்த மாதிரியாக அதுல்யா அவரின் விவசாய நிலத்தில் புன்னகைத்தபடி திரும்பி பார்த்து ஓடி வருவதை காணொளியாக எடுத்திருக்கிறார். அதனை நல்ல பின்னணி இசை சேர்த்து தற்போது பதிவேற்றியுள்ளார்.
அதுல்யாவிற்கு பொதுவாக இணைய ரசிகர்கள் அதிகம். இவரின் ஒவ்வொரு பதிவுக்கும் பல லட்சம் பார்வையாளர்களும் லைக்குகளும் வரும். இந்த நேரத்தில் அதுல்யா ரசிகர்களின் இதயத்தை அப்பலம் போல நொறுக்கி உள்ளார். இதனால் முன்பை விட பலநூறு ரசிகர்கள் அதிகபடியாகவே இந்த காணொளியை பார்த்து லைக் கொடுத்துள்ளனர்.
இந்த காணொளியின் கமெண்டில் ரசிகர்கள் இன்னைக்கு எத்தனை போரோட ஹார்ட் நொறுங்க போகுதோ என்றெல்லாம் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த காணொளி பெரிய அளவில் ரசிகர்களால் ரசிக்க பட்டு வருவதால் மற்ற மொழி ரசிகர்களும் இந்த காணொளியை பார்த்து விட்டு தெலுங்கு மற்றும் கன்னட மொழியிலும் நடிங்க என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதுல்யாவும் கொரன்டைன் நேரத்தில் அதிகபடியாக இணையத்திலே இருப்பதால் பல ரசிகர்களின் அன்புக்கும் நன்றி தெரிவித்து வருகிறார். சில கமெண்டுகள் அதுல்யாவையே வெட்கபட வைத்து விடுகிறது அந்த அளவுக்கு ரசிகர்கள் இந்த காணெளியை பார்த்து அதுல்யாவை புகழ்ந்து வருகின்றனர் .
கொரோனா பாதிப்பு காரணமாக அதுல்யா போலவே பல இன்ஸ்டாகிராம் நாயகிகளும் தங்களின் பழைய அழகிய புகைப்படங்கள் மற்றும் அழகிய காணொளிகளை தூசி தட்டி எடுத்து தற்போது வெளியிட்டு எந்த விதத்திலும் தங்களின் இணைய ரசிகர்கள் குறையாத அளவிற்கு பார்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











