இதைப் பார்த்தீங்களா.. நல்லாருக்கா.. வாவ் அதுல்யா.. செம ஸ்வீட்!
சென்னை : நடிகை அதுல்யா ஸ்வீட் செய்த வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
ஊரடங்கினால் தனது முழு நேரத்தையும் வீட்டிலே செலவிட்டு வருகிறார் அதுல்யா ரவி. வீட்டில் அவர் செய்யும் சேட்டைகளை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். இணையத்தில் இவரது வீடியோக்கள் தான் டிரெண்டிங் என்று சொல்லலாம்.

இதே போல் தற்போதும் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருக்கிறார் அதுல்யா . இதில் தானே தன்னந்தனியாக கச்சாயம் என்ற ஒரு இனிப்பு செய்து அதை எப்படி செய்தேன் என்று ரசிகர்களுக்கு காட்டியுள்ளார். இதில் அதுல்யா தனது அம்மாவின் எந்த உதவியையும் நாடாமல் தானே செய்து அசத்தியுள்ளார். இந்த வீடியோ பதிவின் ஆரம்பத்தில் அதுல்யா கடைசியாக என்னையும் வேலை செய்ய வச்சுட்டாங்க ஆனால் வீட்டில் சும்மா இருப்பதற்கு இதை செய்யலாம் என்று கூறியிருக்கிறார்.

தனிமைபடுத்தல் முறை இந்தியாவில் ஆரம்பித்த நாள் முதல் அதுல்யா தனது இன்ஸ்டாகிராம் வாயிலாக பல விஷயங்களை செய்து வருகிறார். இதில் இவர் அப்பாவுடன் செய்த புலி காமெடியும் தனது தம்பியுடன் போட்ட குடும்பி பிடி சண்டையும் தொலைக்காட்சி செய்திகளில் வரும் அளவிற்கு டிரெண்டானது .

அதுல்யா போலவே பல பிரபலங்களும் தாங்கள் எவ்வாறு நேரத்தை செலவிட்டு வருகிறோம் என்பதை தங்களின் சமூக வலைத்தளங்களின் வாயிலாக ரசிகர்களுடன் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர் .
கொரோனா தொற்று பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அனைவரும் வீட்டிலிருப்பது கட்டாயமாக்கபட்டுள்ளது. இதனால் பிரபலங்கள் போடும் பதிவுகள் தான் இணைய ரசிகர்களின் முதல் எண்டர்டெயின்மென்டாக மாறியுள்ளது. முன்பை விட ரசிகர்களின் அன்பு இந்த நேரத்தில் அதிகமாக கிடைப்பதால் அதுல்யா போன்ற பிரபலங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











