எந்த வயசா இருந்தா என்ன?.. அப்பா இடுப்புல ஏறி உட்கார்ந்த அதுல்யா ரவி.. வேறலெவல் வீடியோ!
சென்னை: தந்தையர் தினத்தை முன்னிட்டு தனது அப்பாவின் இடுப்பில் ஏறி அமர்ந்த அதுல்யா ரவியின் வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அதுல்யா ரவி.
தொடர்ந்து தமிழில் கதாநாயகன், ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், கீ, சுட்டுப்பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2, என் பெயர் ஆனந்தன், முருங்கைக்காய் சிப்ஸ், வட்டம், எண்ணித் துணிக, காடவர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த ஆண்டு தெலுங்கில் வெளியான மீட்டர் திரைப்படத்தில் நடித்து டோலிவுட்டிலும் இவர் அறிமுகமாகியுள்ளார். அடுத்ததாக ஹரிஷ் கல்யாண் நடித்து வரும் டீசல் படத்திலும் அவருக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கோவை பொண்ணு: கோயம்புத்தூரை சேர்ந்த அதுல்யா ரவியின் நிஜப் பெயர் திவ்யா. இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி படிப்பை படித்து முடித்த அதுல்யா ரவி ’பால்வாடி காதல்’ எனும் குறும்படத்தில் நடித்து பிரபலமானார். அதன் பின்னர் ’காதல் கண் கட்டுதே’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. சினிமாவுக்காக தனது பெயரை அதுல்யா ரவி என மாற்றிக் கொண்டார்.
30 வயது ஆகப்போகிறது: 1984-ஆம் ஆண்டு கோவையில் பிறந்த அதுல்யா ரவிக்கு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வந்தால் 30 வயது ஆகிவிடும். தமிழ் சினிமாவில் சிறு பட்ஜெட் படங்களில் நடித்து வந்த இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் இவருக்கு 2.5 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.
அப்பா இடுப்பில் உட்கார்ந்து: காஞ்சனா படத்தில் ராகவா லாரன்ஸ் அம்மாவாக நடித்த கோவை சரளா இடுப்பில் ஏறி எப்படி உட்காருவாரோ அதேபோல தந்தையர் தினத்தை முன்னிட்டு தனது அப்பா இடுப்பின் மீது ஏறி 30 வயது நடிகை அதுல்யா ரவி அமர்ந்திருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது. தந்தையர் தினத்தை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை அதுல்யா ரவி வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். தன்னுடைய முதல் காதல் தன்னுடைய முதல் ஹீரோ அப்பா தான் என பதிவிட்டுள்ளார்


Click it and Unblock the Notifications











