காருக்கு மேல ஏறி ஜாலியான சவாரி.. கோயம்புத்தூருக்கு பயணம் செய்யும் க்யூட் நடிகை!
சென்னை : சினிமாவில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் துடிப்பான இளம் நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை அதுல்யா ரவி.
கேப்மாரி, நாடோடிகள் 2 உள்ளிட்ட திரைப்படங்களை தொடர்ந்து இப்பொழுது வட்டம் மற்றும் முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
பல அழகான புகைப்படங்களை கவர்ச்சி ததும்பும் வெளியிட்டு வரும் அதுல்யா இப்பொழுது காரின் மீது ஜாலியாக ஏறி உட்கார்ந்துக்கொண்டு சொந்த ஊருக்கு பயணம் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு சந்தோசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மிக கவனமாக
கட்டப்பாவ காணோம், சத்யா, வால்டர் என தரமான திரைப்படங்களில் நடித்து இப்போது பலரின் கவனத்தையும் ஈர்த்து வரும் நடிகர் சிபி சத்யராஜ் அடுத்தடுத்த திரைப்படங்களில் மிக கவனமாக கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அதுல்யாவும் ஒருவராக
அவ்வகையில் இப்போது இவர் நடித்து வரும் வட்டம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகள் இடம் பெற்றுள்ள நிலையில் அதில் அதுல்யாவும் ஒருவராக நடித்து வருகிறார்.

அதுல்யாவின் நடிப்புத்திறன்
அதுல்யாவின் சமீபத்திய திரைப்படங்களான நாடோடிகள் 2 மற்றும் கேப்மாரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது அதுமட்டுமல்லாமல் அதுல்யாவின் நடிப்புத்திறன் பல்வேறு வகையில் வெளிப்பட்டு இருந்தது.

சுவாரஸ்யமான தகவல்கள்
அதைத்தொடர்ந்து இப்பொழுது சிபி சத்யராஜ் இணைந்து வட்டம் திரைப்படத்தில் நடித்து வரும் அதே சமயம் சாந்தனு பாக்யராஜ் உடன் இணைந்து காதல் மற்றும் காமெடி நிரம்பிய படமாக உருவாகி வரும் முருங்கைக்காய் சிப்ஸ் என்ற திரைப்படத்திலும் அதுல்யா, நடித்து வர அந்தப் படத்தைப் பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் அவ்வப்போது வெளியாகி மேலும் எதிர்பார்ப்பை கூட்டுகிறது

ஜாலி ட்ரிப்
வட்டம் மற்றும் முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் அதுல்யா மேலும் சில பிரபலமான நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியானதை அடுத்து இப்போது இவர் வெளியிட்டுள்ள செம ஜாலி ட்ரிப் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

காரின் மீது ஏறி உட்கார்ந்து
கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்ட நடிகை அதுல்யா இப்பொழுது சென்னையில் இருந்து மீண்டும் தனது சொந்த ஊரான கோயம்புத்தூருக்கு காரில் செம ஜாலியாக சென்ற நிலையில், காரின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு அட்டகாசம் செய்தவாறு செம ஜாலியாக இயற்கையை ரசித்துக் கொண்டு அனைவரும் ரசிக்கின்ற வகையில் புகைப்படங்களை வெளியிட்டு இருப்பது ரசிகர்களை மெய்மறக்க வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











