புத்தாண்டு ட்ரீட் கொடுத்த நீலக்குயில் அதுல்யா.. க்யூட் போட்டோஸ்

சென்னை : புத்தாண்டுக்கு புதிய போட்டோக்களை வெளியிட்டுள்ளார் அதுல்யா ரவி. நீல உடையில் கள்ள சிரிப்பு சிரித்து நீல குயில் போல சும்மா சூப்பரா இருக்கிறார் அதுல்யா.

அதுல்யா சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர். அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்துவார். தற்போது புத்தாண்டு பரிசாக அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் டிரெண்ட்டாகி வருகிறது.

Athulya ravi new photoshoot

வழக்கம் போல அவரது புகைப்படங்களுக்கு இதயங்களை தந்து வரும் ரசிகர்கள். மேலும் அவர் படத்தை பகிர்ந்து வருகின்றனர். எங்கு பார்த்தாலும் நீல நிற உடையில் அதுல்யா தான் சமூகவலைத்தளம் முழுக்க பரவி இருக்கிறார் அதுல்யா.

கடைசியாக இரு போட்டோசூட்களில் கவர்ச்சி கலந்த ஆடைகளில் போட்டோ எடுத்த அதுல்யா தற்போது நீல நிற ஆடையில் மிகவும் க்யூட்டாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ரசிகர்களுக்காக அதுல்யா தவறாமல் போட்டோசூட் செய்வதை வழக்கமாக்கிருக்கிறார் .

Athulya ravi new photoshoot

அதுல்யாவிற்கு இன்ஸ்டாகிராமில் சுமார் 13லட்சம் ஃபாளோவர்களை வைத்து இருக்கிறார். மேலும் ட்விட்டரில் சுமார் 2 அரை லட்சம் ஃபாளவர்கள் இருக்கிறார்கள். இது வளர்ந்து வரும் ஒரு கதாநாயகிக்கு உள்ள மிக பெரிய நல்ல விசயம் ஏனெனில் இன்று அனைத்து விசயங்களையும் இணையம் தீர்மானிக்கிறது.

இணையத்தில் பிரபலம் அடைபவர்களுக்கு எளிதில் சினிமா வாய்ப்பு கிடைக்கிறது .அதே போல் இணையத்தில் அதிகம் ரசிகர் கூட்டம் இருக்கும் நடிகைக்கு படத்தில் எளிதில் கதாநாயகிக்கான வாய்ப்பு கிடைக்கிறது .

Athulya ravi new photoshoot

இதுவே அதுல்யாவிற்கு நடந்து வருகிறது சினிமாவில் வந்த புதிதில் பட வாய்ப்புகளுக்கு சிரமபட்ட அதுல்யா தொடர் தோல்வி படங்களால் துவண்டு போனார் ஆனால் அவரை மீட்டெடுத்தது அவரின் இணைய ரசிகர்கள் தான் அவர் அதன்பின் மிகவும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருந்து தனது ரசிகர்களின் பல வேண்டுகோள்களை நிறைவேற்றி வருகிறார் .

இதன்மூலம் அதுல்யா அடுத்த கட்டதிற்கும் பயணித்து இருக்கிறார் என்று தெரிகிறது . தற்போது அதுல்யா தமிழ்நாட்டின் ஒரு மிக முக்கிய ஆடைகடை விளம்பரத்தில் நடித்து இருக்கிறார் மேலும் சன் தொலைகாட்சியின் சன் குடும்பம் விருதுகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார் .இது அதுல்யாவின் அசுர வளர்ச்சி என்றே கூறலாம் .

Athulya ravi new photoshoot

அதுல்யாவின் நடிப்பில் அடுத்த சாட்டை மற்றும் கேப்மாரி படங்கள் வெளியாகி இருக்கிறது .அடுத்தாக அதுல்யா சமுத்திரகனியின் நாடோடிகள் 2 படத்திலும் நடித்துள்ளார்.அந்த படமும் கூடிய விரைவில் வர இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X