கருப்பு பூந்தோட்டமாக மாறிய வெள்ளை ரோஜா.. அதுல்யாவின் அசத்தல் க்ளிக்!

சென்னை: அதுல்யா பளிச் கருப்பு நிற சேலையில் இருக்கும் புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Recommended Video

அதுல்யாவை கலாய்த்த தம்பி ராமையா | Thambi Ramaiah | Adutha Sattai Audio Launch

சென்னை எம்.ஐ.டி கல்லூரியில் நடைபெற்ற ஒரு விழாவில் நடிகை அதுல்யா சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இரு‌ந்தா‌ர். இந்த விழாவிற்கு சேலை அணிந்து வந்த அதுல்யா ஒரு போட்டோசூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றியிருக்கிறார் .

Athulya ravi new photoshoot

இந்த விழாவில் கலந்து கொண்ட அதுல்யாவிற்கு மாணவர்கள் வெகுசிறப்பான வரவேற்பை கொடுத்தனர். இந்த விழாவின் போது மாணவர்கள் காட்டிய அன்பிற்கு அதுல்யா நன்றி தெரிவித்திருந்தார்.

அதுல்யா இதை போல பல விழாக்களில் சிறப்பு விருந்தினராக கலந்து இருக்கிறார். அதுல்யா காதல் கண் கட்டுதே படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பெற்றதில் இருந்து பல விழாக்களுக்கும், கல்லூரி விழாக்களுக்கும் அழைக்கப்பட்டு வருகிறார்.

Athulya ravi new photoshoot

அதுல்யா போன்ற நடிகைகள் தொடர் வளர்ச்சி அடைவதும் இந்த மாதிரியான விசயங்களில் தான். ரசிகர்கள் அனைவரும் இந்த மாதிரியான விழாக்களின் போது மிக பெரிய அளவில் பிரபலங்களை கொண்டாடுவது வழக்கம் தான்.

அதுல்யா எம்.ஐ.டி கல்லூரி விழாவின் போது உடுத்திய சேலையில் அழகிய போட்டோக்களை தற்போது பதிவேற்றியிருக்கிறார். கருப்பும் கோல்டன் நிறமும் கலந்த அந்த சேலையில் மிகவும் அழகிய பெண்ணாகவும் சற்று முதிர்ச்சி அடைந்த பெண்ணின் தோற்றத்தில் அதுல்யா காணப்படுகிறார்.

Athulya ravi new photoshoot

இந்த போட்டோக்களுக்கு ரசிகர்கள் வழக்கம் போல தங்களின் இதயங்களை கொடுத்து வருகின்றனர். தமிழ் ரசிகர்கள் புடவை கட்டிய பூந்தோட்டமே என வர்ணித்து உள்ளனர். மற்ற மொழி ரசிகர்களும் அதுல்யாவின் புகைப்படங்களுக்கு கமெண்ட் செய்து வருகின்றனர் .

அதுல்யா கடைசியாக கேப்மாரி மற்றும் நாடோடிகள்2 படத்தில் நடித்து இருந்தார் இந்த இரண்டு படங்களுமே அதுல்யாவிற்கு சரியான வரவேற்பை பெற்று தரவில்லை இருந்தும் அதுல்யா மார்கெட் இணைய ரசிகர்களிடம் குறைய வில்லை. அதுல்யா அடுத்ததாக வட்டம் படத்தில் நடித்து வருகிறார். பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தில் சிபிராஜ் நாயகனாக நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X