அழகு அதுல்யா.. இன்னாம்மா யோகா செய்யுறாரு.. மனம் வலிமையா இருந்தாதான் எதிலும் வெல்ல முடியுமாம்!
சென்னை: அழகு ததும்பும் நம்ம கோவை பொண்ணு அதுல்யா ரவி, சவாலான யோகாக்களை அசால்ட்டாக செய்யும் புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.
Recommended Video
சமூக வலைதளங்களில் தமிழ் ரசிகர்கள் மனங்களை கொள்ளை கொண்டு வரும் அதுல்யா ரவி குறித்த அறிமுகத்தை தனியாக சொல்ல வேண்டிய தேவையில்லை.
இந்த லாக்டவுன் நேரத்தில் நடிகைகள் பலரும் யோகா, வொர்க்கவுட் உள்ளிட்டவற்றை செய்து வரும் நிலையில், அதுல்யா ரவியும் தற்போது யோகா செய்யும் புகைப்படங்களை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

முட்டிப்போட்டு
கருப்பு நிற டாப்ஸ் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்தபடி தனது வீட்டின் மொட்டை மாடியில் யோகா செய்துள்ள புகைப்படங்களை கேப்மாரி நடிகை அதுல்யா ரவி பகிர்ந்துள்ளார். முட்டிப்போட்டு பின் பக்கம் இருக்கும் கால் விரல்களை, கைகளால் பிடித்தபடி மிகவும் சிரமமான ஆசனத்தை அசால்ட்டாக செய்துள்ளார் அதுல்யா ரவி.

கைகளை மடக்கியபடி
மற்றொரு ஆசனத்தில் தனது கைகளை மடக்கியும் கண்களை மூடியபடியும் வணக்கம் வைத்துள்ளார் நடிகை அதுல்யா ரவி. தனது க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மனங்களை கொள்ளைக் கொண்ட நடிகை அதுல்யா ரவி, இப்படி திடீரென யோகா பக்கம் திரும்பி இருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

வலிமை
உங்களின் உணர்வுகளை நீங்கள் வெல்ல வேண்டும் என்றால், அதற்கு உங்களின் மனம் அதிக வலிமையுடன் இருக்க வேண்டும். மனம் வலிமை பெற தினமும் யோகா அல்லது உடற்பயிற்சியை கட்டாயம் தவறாமல் செய்யுங்கள் என யோகாவுடன் அட்வைஸையும் நடிகை அதுல்யா ரவி செய்துள்ளார்.

கை பின்னிக்குச்சே
இரண்டு கைகளையும் ஒன்றோடு ஒன்று பின்னியபடி வணக்கம் வைக்கும் ஆசனத்தை காதல் கண் கட்டுதே படத்தின் நாயகி அதுல்யா ரவி செய்திருப்பதை பார்த்த நெட்டிசன் ஒருவர், நக்கலாக, "ஐய்யய்யோ.. கை பினிக்குச்சே எப்படி எடுப்பீங்க" என டிரோல் செய்து கமெண்ட் செக்ஷனை கலகலப்பாக்கி இருக்கிறார்.

யோகால பெரிய ஆளு
கஷ்டமான யோகாசனங்களை அசால்ட்டா செய்யும் அதுல்யாவின் திறமையை பல ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். இந்த அதிதீவிர ரசிகர், "யோகால பெரிய ஆளா ஆகிடுவீங்க போலிருக்கே" என கமெண்ட் செய்துள்ளார். மற்றும் சில ரசிகர்கள் அழகின் யோக நிலை அருமை என்றும், செம என்றும் கமெண்ட் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











