கொஞ்சம் கொஞ்சமா கவர்ச்சி பக்கம் சாயும் அதுல்யா.. வைரலாகும் புகைப்படங்கள்.. கலாய்க்கும் ரசிகர்கள்!
சென்னை: ஞாயிற்றுக் கிழமை ஆனாலே சின்ராசு புல்லட் எடுத்துட்டு கிளம்பிடுவான் என்பதை போல, நம்ம அதுல்யா ரவி தனது அழகான போட்டோஷூட் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்.
கோவை பொண்ணான அதுல்யா ரவி, தமிழ் சினிமாவில் இளம் ஹீரோயினாக வலம் வருகிறார்.
சமூக வலைதளங்களில் அவர் பதிவிடும் போட்டோக்களுக்கு தனியாக ஒரு ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.

சன்டே ஸ்பெஷல்
ஞாயிற்றுக் கிழமையான இன்று மீண்டும் தனது அழகான, கவர்ச்சிகரமான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார் நடிகை அதுல்யா ரவி. வாழ்க்கையை பற்றி ஓவராக யோசிக்காதீங்க, நம்பிக்கையுடன் நடைபோடுங்க, நிச்சயம் வளர்ச்சி பாதை வரும் என தத்துவத்தையும் கூடவே சேர்த்து பதிவிட்டுள்ளார்.

ரொம்ப அழகாக
ஸ்ட்ரைப்ஸ் போட்ட டாப்ஸ் அணிந்து கொண்டு சிம்பிள் பியூட்டியாக இருக்கிறார் அழகு சிலை அதுல்யா ரவி. தலையை கோதியபடியும், மயக்கும் விழிகளால் ரசிகர்களை பார்க்கும் படியும் இவர் கொடுத்துள்ள போஸ்களை பார்த்த ரசிகர்கள் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டு அதுல்யா ரவியை வழக்கம்போல வர்ணித்து வருகின்றனர்.

முன்னழகை காட்டியபடி
அழகான போட்டோக்களை பதிவிட்ட நடிகை அதுல்யா ரவி, தனது முன்னழகை காட்டியவாறு படுத்தபடி கொடுத்திருக்கும் போஸை பார்த்த ரசிகர்கள் லிட்டர் கணக்கில் ஜொள்ளு விட்டு வருகின்றனர். வித விதமான போட்டோக்களை அவர் ஷேர் செய்திருந்தாலும், இந்த ஒரு போட்டோவைத் தான் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இது உருப்படி
சாய்ந்து படுத்தபடி அதுல்யா ரவி, கொடுத்திருக்கும் இன்னொரு ஹாட்டான அழகான புகைப்படமும் ரசிகர்கள் விருப்ப புகைப்படமாக மாறி இருக்கிறது. "இது உருப்படி" என இந்த ரசிகர், எதை நினைத்து பதிவிட்டு இருக்கிறார் என்பது இணையதள வாசிகளுக்கு ரொம்ப நல்லாவே தெரியும்.

பஜ்ஜி கடை ஆன்ட்டி
அதுல்யாவின் அழகு ததும்பும் இந்த புகைப்படங்களை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்பது போல, கோமாளி படத்தில் பஜ்ஜி கடை ஆன்ட்டியை நடிகர் பொன்னம்பலம் பார்க்கும் புகைப்படத்தை பதிவிட்டு நெட்டிசன்கள் வலிந்து வருகின்றனர். என்ன ஒரு ஹாட் என்றும், ஓவர் கவர்ச்சி என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.

நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்
உங்களுக்கு கிளாமர் ரோல் தான் செட் ஆகும்.. நயன்தாரா வரட்டும், கீர்த்தி சுரேஷ் வரட்டும், நமக்கு எப்பவுமே அதுல்யா ரவி தான் என இந்த தீவிர ரசிகர், தனது தலைவியின் அழகை வர்ணித்து கமெண்ட் செய்துள்ளார். மேலும் சிலர், மின்னொளியில் பொன்னிற மலர் இவள் தானோ என கவிதையும் வாசித்து வருகின்றனர்.

சான்ஸ் வேணுமா
காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை அதுல்யா ரவி, அடுத்த சாட்டை, நாடோடிகள் 2, கேப்மாரி உள்ளிட்ட படங்களில் இரண்டாவது நாயகியாகவே நடித்துள்ளார். இப்படி அடிக்கடி போட்டோக்களை பதிவிட்டு, புதுப்பட வாய்ப்புகளை தேடுறீங்களா என சில நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

இப்படியெல்லாம் போடாதீங்க
தளபதி விஜய்யின் பிறந்தநாள் காமன் டிபி மற்றும், பர்த்டே ஸ்பெஷல் மாஷ் அப்களை சமீபத்தில் விஜய்யின் தீவிர ரசிகையான அதுல்யா ரவி வெளியிட்டு வைரலாக்கினார். இந்நிலையில், இந்த தளபதி ரசிகர், பிகில் படத்தின் புகைப்படத்தை போட்டு, இப்படியெல்லாம் போட்டோ போஸ்ட் பண்ணாதீங்க என செல்லமாக மிரட்டுகிறார்.

ஹாட் லுக்கிங்
அதுல்யா ரவியின் முன்னழகு தாராளமாக தெரியும் படி படு சூடாகயிருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட இந்த ரசிகர், ஹாட் லுக்கிங் என கமெண்ட் செய்துள்ளார். இவரை போலவே பல ரசிகர்களுக்கும் அதுல்யா ரவியின் அந்த புகைப்படத்தின் மீது தான் ஓவர் கண்ணே. அதைத் தெரிந்து தான் அவரும் இந்த போட்டோவை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.


Click it and Unblock the Notifications











