நயன்தாராவை தொடர்ந்து பக்தி பரவசமாக மாறிய தமிழ் நடிகை.. தைப்பூசத்துக்கு வாழ்த்து சொல்லி அசத்தல்!
சென்னை: தைப்பூசத் திருநாளை முன்னிட்டு தமிழ் ரசிகர்களுக்கு புகைப்படம் போட்டு வாழ்த்து கூறியுள்ளார் நடிகை அதுல்யா ரவி.
காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அதுல்யா ரவி, கேப் மாரி, நாடோடிகள் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்து இளைஞர்களுக்கு எனர்ஜி டானிக் கொடுக்கும் அதுல்யா, தைப்பூசத் திருநாளை முன்னிட்டு பக்தி பரவசமான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

நயன்தாரா
மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்து வரும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, சமீப காலமாக தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சென்ற பக்தி பரவசமான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகின. இந்நிலையில், பக்திமானாக மாறிய நடிகை அதுல்யா ரவி தனது புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
தைப்பூச வாழ்த்துக்கள்
தமிழ் கடவுளான முருகப் பெருமானுக்கு உகந்த நாளான தைப்பூசத் திருநாள் ஹாஷ்டேக் காலையில் இருந்தே ட்விட்டரில் #தைப்பூசம் என டிரெண்டாகி வருகிறது. இந்நிலையில், நடிகை அதுல்யா ரவி முருகன் கோயிலுக்கு சென்று, நெற்றியில் விபூதி, குங்குமத்துடன் க்யூட்டாக இருக்கும் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எந்த கோயில்?
ஜனவரி 31ம் தேதி பல தடைகளுக்கு பிறகு வெளியான சமுத்திரகனியின் நாடோடிகள் 2 படத்தில் சசிகுமார், அஞ்சலி உடன் இணைந்து நடிகை அதுல்யா ரவி முக்கியமான ரோலில் நடித்திருந்தார். நாடோடிகள் 2 வெற்றிகரமாக 2வது வாரத்தை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், குன்றத்தூர் முருகன் கோயிலுக்கு சென்று அதுல்யா ரவி வழிபட்டுள்ளார்.

தமிழ் பொண்ணு
இனிய தைப்பூசத் திருநாள் வாழ்த்துக்கள் என பதிவிட்டு தமிழ் பொண்ணுன்னு நிரூபிச்சிட்டீங்க என அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து பாராட்டி வருகின்றனர். கோவையை சேர்ந்த அதுல்யா ரவி, காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி பல படங்களில் நடித்து வருகிறார்.
பொம்மை வேணும்
குன்றத்தூர் முருகன் கோயிலில் மங்களகரமாக சாமி கும்பிட்டு விட்டு, சிம்பிள் சுடிதாரில் க்யூட்டாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ள அதுல்யா ரவியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படத்தை பார்த்த இந்த குசும்புக்கார நெட்டிசன், மாப்ளே, இந்த பொம்மை வேணும் வாங்கி குடுய்யா.. என கமெண்ட் செய்துள்ளார்.
இன்னைக்கு புரொபஸல் டே
தைப்பூசம் மட்டும் இல்லை அதுல்யா ரவி இன்னைக்கு புரொபஸல் டே கூடத்தான்.. லவ் யூ சோ மச் என சிவகார்த்திகேயன் புகைப்படங்களை பதிவிட்டு, இந்த நெட்டிசன் தைப்பூசத்தன்று கெடா வெட்ட பார்க்கிறார். அதுல்யாவின் இந்த அழகான புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் க்யூட்டா இருக்கீங்க, அழகா இருக்கீங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.
புடவை கட்டியிருக்கலாம்
சுடிதாரில் போஸ் கொடுத்துள்ள அதுல்யா ரவியின் புகைப்படத்தை பார்த்துவிட்டு, "நல்ல நாள் அதுவுமா புடவை கட்டியிருக்கலாம்.. லூசு பொண்ணு" என இந்த நெட்டிசன் செம்ம கடுப்பில் அதுல்யா ரவியை கழுவி ஊற்றியுள்ளார். நீங்க சொன்னதை நோட் பண்ணிப்பாங்க.. நெக்ஸ்ட் டைம் ட்ரை பண்ணு வாங்க.. டோன்ட் வொரி பிரதர்.


Click it and Unblock the Notifications











