கொரோனா எதிர்ப்பு.. குட்டி ஸ்டோரி பாட்டை இப்படியும் பாடலாம்.. அதுல்யா ரவி அட்டகாசம்!
சென்னை: தளபதி விஜய்யின் தீவிர ரசிகையும் நடிகையுமான அதுல்யா ரவி, குட்டி ஸ்டோரி பாடலை கொரோனாவுக்கு எதிராக பாடியுள்ளார்.
கோவையில் கல்லூரியில் படித்து வந்த அதுல்யா ரவி, காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தார்.
சமீபத்தில் வெளியான நாடோடிகள் 2, கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

மக்கள் ஊரடங்கு
பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதன் பேரில், இன்று நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேறாமல், கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் ஊரடங்கை லேசாக நினைத்துக் கொள்ளாமல், மக்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என இந்திய நடிகர்கள் பலரும் கேட்டுக் கொண்டனர்.
அதுல்யா ட்வீட்
இந்நிலையில், நடிகை அதுல்யா ரவி, மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான குட்டி ஸ்டோரி பாடலில் வரும் பலவித பிராப்ளம்ஸ் (கொரோனா) வில் கம் அண்ட் கோ, கொஞ்சம் சில் பண்ணு மாப்பி என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தளபதி விஜய்யின் தீவிர ரசிகையான அதுல்யா ரவி, கொரோனாவுக்கு எதிராக குரல் கொடுக்கும் போது, விஜய் ரசிகர்களை குஷிபடுத்தியுள்ளார்.

நம்மாளுங்கதான்
கொரோனா வைரஸ் பீதி காரணமாக உலகம் முழுவதும் பேய் அறைந்தது போல அலறி கிடக்க, நம்மாளுங்கதான், கொரோனா மீம்ஸ், கொரோனா போண்டா, கொரோனா புடவை, கொரோனா பாட்டு என பங்கம் பண்ணி வருகின்றனர். குட்டி ஸ்டோரி உள்ளிட்ட பல ஹிட் தமிழ் பாடல்கள் கொரோனா பாடல்களாக மாறி வருகின்றன. முத்து படத்தில் வரும் தில்லான்னா தில்லான்னா பாடலும் கொரோனா கொரோனா என மாறி வைரலாகி வருகிறது.

மாஸ்டர் நடிகர்
மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி பாட்டு மட்டுமல்ல, அடுத்ததாக நடிகை அதுல்யா ரவி, மாஸ்டர் படத்தில் முக்கியமான ரோலில் நடித்து வரும் நடிகர் சாந்தனு நடிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளார். பாக்கியராஜ், சாந்தனு, அதுல்யா ரவி நடிப்பில் உருவாகவுள்ள அந்த புதிய படத்தின் பூஜை அண்மையில் போடப்பட்டது.

டிரெண்டிங்
சமூக வலைதளத்தில் நடிகை அதுல்யா ரவி, போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டாலே, அதனை டிரெண்ட் செய்ய தனி ரசிகர்கள் பட்டாளமே அவருக்கு இருக்கிறது. கொரோனா குறித்த ட்வீட்டுக்கு கூட, 4 விதமான போட்டோஷூட் புகைப்படங்களை போட்டுத் தான் அதுல்யா, மக்கள் ஊரடங்கு குறித்தே அறிவுறுத்தியுள்ளார்.
போட்டோஷூட் கேக்குதா
நடிகை அதுல்யா ரவி, பதிவுக்கு கீழே தளபதி விஜய் ரசிகர்கள் அவரை கொண்டாடினாலும், கலாய்ப்பதற்கென்றே இணையத்தில் வலம் வரும் சில நெட்டிசன்கள், பங்கமாக கலாய்த்து வருகின்றனர். அங்க கொரோனா வந்து ஊரே செத்துகிட்டு இருக்கு, உனக்கு போட்டோஷூட் கேக்குதா என இந்த நெட்டிசன் நியாயமான கேள்வியை கேட்டு கலாய்த்துள்ளார்.


Click it and Unblock the Notifications











