»   »  விஜய் படத்துக்கு புது பிரச்சினை

விஜய் படத்துக்கு புது பிரச்சினை

Subscribe to Oneindia Tamil
Click here for more images
விஜய்யின் அழகிய தமிழ் மகன் படத்துக்கு மீண்டும் சிக்கல் வந்துள்ளதாம்.

தீபாவளிக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள படம் அழகிய தமிழ் மகன். ஆனால் இப்போது திரைக்கு வருமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் திரையிட உரிமை பெற்றிருந்த பிரமிட் சாய்மீரா நிறுவனம் திடீரென அதிலிருந்து விலகி விட்டதாம். இதுதொடர்பாக விளக்கம் அளித்து திரைப்படத் தயாரிப்பாளர் கவுன்சிலுக்கும் அது கடிதம் கொடுத்துள்ளதாம்.

இதனால் விஜய், தயாரிப்பாளர் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த திரையுலகினரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனராம்.

இப்படத்தின் தயாரிப்பாளர் அப்பச்சன் படம் தொடர்பான சில நிதிப் பிரச்சினைகளை தீபாவளிக்கு முன்பாக தீர்த்துக் கொள்ளும் வழியைக் காணோம் என்பதை உணர்ந்த பின்னர்தான் இந்த முடிவுக்கு சாய்மீரா நிறுவனம் வந்ததாம்.

விஜய்க்கு அப்பச்சன் சம்பள பாக்கியை வைத்துள்ளாராம். அதைக் கேட்டு விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரேசகர் அப்பச்சனை வலியுறுத்தி வருகிறாராம். உடனடியாக சம்பளப் பாக்கியை செட்டில் செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளாராம். இதனால் படத்திற்கு ஏதாவது சிக்கல் ஏற்படலாம் என்று யோசித்தே திரையீட்டிலிருந்து விலகியதாம் சாய்மீரா என்கிறார்கள்.

இதற்கிடையே, அழகிய தமிழ் மகன் படத்தின் அட்வான்ஸ் புக்கிங் இதுவரை எந்தத் தியேட்டரிலும் தொடங்கவில்லையாம். மாறாக, அழகிய தமிழ் மகன் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்த பல தியேட்டர்கள் வேறு படத்தை திரையிடலாமா என யோசிக்க ஆரம்பித்துள்ளனவாம்.

இந்தக் குழப்பம் இப்படி இருந்தாலும் இன்னொரு பக்கம் ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டுடியோவில் படத்தின் பின்னணி இசை சேர்ப்பு, இசைக் கலப்பு ஆகிய பணிகள் முழு வேகத்தில் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்தப் பிரச்சினைகள் குறித்து பிரமிட் சாய்மீரா நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு முக்கிய நிர்வாகியிடம் கேட்டபோது, இதுவரை இந்தப் படத்தின் விநியோகஸ்தர் என்ற அளவில் மட்டுமே எங்களது நிறுவனப் பெயர் பட விளம்பரங்களில் இடம் பெற்றுள்ளது. பிரச்சினையை சுமூகமாகத் தீர்க்க முயன்று வருகிறோம். எல்லாம் நல்லபடியாக நடந்து திட்டமிட்டபடி படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய நாங்கள் முயற்சிக்கிறோம் என்றார்.

Read more about: vijay
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil