»   »  எமி ஜாக்சனுக்கு போட்டியாக பிரசாந்த் களமிறக்கிய ஆஸ்திரேலியா மாடல்

எமி ஜாக்சனுக்கு போட்டியாக பிரசாந்த் களமிறக்கிய ஆஸ்திரேலியா மாடல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வடநாட்டு நாயகிகள், மலையாள தேசத்து மங்கைகள் தமிழ் திரைப்படங்களில் வரிசைகட்டி நிற்கின்றனர். இப்போது ஆஸ்திரேலியாவில் மாடலாக இருப்பவரை தமிழ் கூறும் நல் உலகிற்கு அழைத்து வந்திருக்கிறார் பிரசாந்த். இவர் எமி ஜாக்சனுக்கு சரியான போட்டியாக வந்துள்ளார் என்று இப்போதே கோலிவுட்டில் பேசப்படுகிறது.

நடிகர் தியாகராஜன் திரைக்கதை, வசனம் எழுதி தயாரிக்கும் படமான, ‘சாஹசம்' படத்தில்தான் பிரஷாந்த் ஜோடியாக ஆஸ்திரேலிய மாடல் அமென்டா நடித்து வருகிறார்.


லண்டனில் பிறந்து

லண்டனில் பிறந்து

அம்மாவுக்கு மகாராஷ்டிரா. அப்பாவுக்கு இங்கிலாந்து நான் லண்டனில் பிறந்தேன் என்கிறார் இந்த 19 வயது பருவக்குயில்.


பாலே டான்சர்

பாலே டான்சர்

அமென்டா இப்போது ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். மாடல் தொழில் செய்து வரும் இவர் அடிப்படையில் ‘பாலே' டான்சராம். போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் வாங்கியுள்ளாராம்.


லண்டனில் நடிப்பு பயிற்சி

லண்டனில் நடிப்பு பயிற்சி

லண்டனில் நடிப்புக் கல்லூரியில் பயிற்சிப் பெற்ற அமென்டாவிற்கு ஏஜென்ட் மூலமாக ‘சாஹசம்' பட வாய்ப்பு கிடைத்ததாம்.


லண்டனில் நடிப்பு பயிற்சி

லண்டனில் நடிப்பு பயிற்சி

லண்டனில் நடிப்புக் கல்லூரியில் பயிற்சிப் பெற்ற அமென்டாவிற்கு ஏஜென்ட் மூலமாக ‘சாஹசம்' பட வாய்ப்பு கிடைத்ததாம்.


எமிக்கு போட்டியா?

எமிக்கு போட்டியா?

எமி ஜாக்சனுக்கு சரியான போட்டி என்று இப்போதே இன்டஸ்ட்ரியில் பேச்சு அடிபடுகிறது. ஆனால் இவரோ தமிழில் நிறைய படங்கள் தயாரிக்கிறார்கள். நிறைய ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்கும். நான் யாருக்கும் போட்டி இல்லை என்கிறார்.


நிறைய படங்களில் நடிப்பேன்

நிறைய படங்களில் நடிப்பேன்

எனக்குப் பிறகு நிறைய ஹீரோயின்கள் நடிக்க வருவார்கள். யாரும் யாருடைய இடத்தையும் பிடிக்க முடியாது. ‘சாஹசம்' ரிலீசான பின் புதிய படங்களில் நடிப்பேன் என்று கூறியுள்ளார் அமென்டா.


25 ஆண்டுகள் ஆயிருச்சே

25 ஆண்டுகள் ஆயிருச்சே

படம் பற்றி கூறிய பிரசாந்த், நான் நடிக்க வந்து 25 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. ‘சாஹசம்' என் முழு திறமையையும் வெளிப்படுத்தும். அருண்ராஜ் வர்மா இயக்குகிறார். ஆஸ்திரேலியா, ஜப்பான், கொரியா நாடுகளில் பாடல் காட்சிகள் படமாகின்றன. இம்மாதம் பாடல்கள் வெளியாகிறது' என்று தெரிவித்துள்ளார்.


English summary
Amanda, a trained ballet dancer from Australia, is making her Tamil debut in upcoming actioner "Saahasam", starring actor Prashanth. She has already shot for over a month for the film.
Please Wait while comments are loading...