அடப்பாவமே, ரசிகர்களால் இப்படி ஒரு பிரச்சனையா யாஷிகாவுக்கு?
சென்னை: யாஷிகா ஆனந்த் ரசிகர்கள் மீதுள்ள பாசத்தில் செய்த காரியம் பிரச்சனையில் முடிந்துள்ளது.
இருட்டு அறையில் முரட்டுக் குத்து படம் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். அவர் மகத் ராகவேந்திராவுடன் ஒரு படம், யோகி பாபுவுடன் ஜோம்பி படத்தில் நடித்து வருகிறார்.

யாஷிகா பொழுதுபோக்கு பூங்காவிற்கு சென்றுள்ளார். அங்கு அவரை அடையாளம் கண்ட இளசுகள் அவரை சுற்றி வளைத்து ஆட்டோகிராப் கேட்டுள்ளனர்.
தற்போது எல்லாம் ரசிகர்கள் செல்ஃபி கேட்கும் வேளையில் இந்த வாலிபர்கள் ஆட்டோகிராப் கேட்டுள்ளனர். அவர்களிடம் சாதா பேப்பர் இல்லாததால் பர்ஸில் இருந்த ரூபாய் நோட்டை கொடுத்து அதில் ஆட்டோகிராப் போடுமாறு கூறியுள்ளனர்.
சரி, ரசிகர்கள் பாசமாக கேட்கிறார்களே என்று யாஷிகாவும் ரூபாய் நோட்டில் கையெழுத்து போட்டுவிட்டார். ரிசர்வ் வங்கி ஆளுநரை தவிர வேறு யாரும் ரூபாய் நோட்டில் கையெழுத்து போடக் கூடாது என்பது உங்களுக்கு தெரியாதா என்று பலர் யாஷிகாவை விளாசியுள்ளனர்.
தற்போது ரூபாய் நோட்டில் ஏதாவது எழுதியிருந்தால் அதை வியாபாரிகள் யாரும் வாங்குவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











