இன்னோரு வாட்டி இந்த கேள்வி கேட்ட அவ்வளவு தான்.. கடுப்பான நடிகை!

சென்னை: அவள் பெயர் தமிழரசி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாக மனோசித்ரா, யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில்,செய்தியாளர் கேட்ட கேள்வியால் கடுப்பாகி இனிமே இந்த கேள்வியை கேட்ட அவ்வளவு தான் என்றார்.

நடிகை மனோசித்ரா 2009 ஆண்டு மனோஹா என்ற இன்னொருவன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். அந்த படத்தைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் கோவிலில் இயக்குனர் மீரா கதிரவனை சந்தித்தார். அதைத் தொடர்ந்து, ஜெய்க்கு ஜோடியாக அவள் பெயர் தமிழரசி படத்தில் நடித்தார்

aval peyar tamilarasi mano chitra interview

இப்படம் வணிக வசூலையும் நல்ல விமர்சனத்தையும் பெற்றது. முதல் படத்திலேயே, சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை பெற்றார். அவள் பெயர் தமிழரசி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது பெயரை மனோச்சித்ரா என்று மாற்றிக்கொண்டார்.

நடிகை மனோசித்ரா: அதன் அறிமுக இயக்குனர் கணேசின் தாண்டவக்கோனே, இத்தனை நாள் எங்கிருந்தாய் போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆனால்,அந்த படங்கள் நிதி சிக்கலால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், விமலுடன் கலிங்கத்துப்பரணி என்ற படத்தில் நடித்தார் அந்த படமும் பாதியிலேயே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

aval peyar tamilarasi mano chitra interview

மிஸ் பண்ணிட்டேன்: தற்போது இவர் Take 1 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார், அதில், சுப்ரமணியபுரம், மைனா, பொக்கிஷம், சூது கவ்வும், கேடி பில்லா கில்லாடி ரங்கா, மனிதன் போன்ற என பல படத்தை மிஸ் பண்ணி இருக்கேன். நான் மிஸ் பண்ண அனைத்துப்படமும் ஹிட்டான படம் அதுதான் எனக்கு வருத்தமே. இதை ஒருமுறை அமீர் சார் கூட, நீ மிஸ் பண்ண படங்கள் எல்லாம் ஹிட்டான படங்கள் , படத்தை பார்த்து தேர்வு செய் என்றார்.

கடுப்பான நடிகை: இதைத்தொடர்ந்து செய்தியாளர், ஏன் தொடர்ந்து படத்தில் நடிக்கவில்லை என்ற கேள்வியால் கடுப்பான மனோசித்ரா, இன்னோரு வாட்டி அந்த கேள்வி கேட்ட அவ்வளவு தான், எல்லாரும் எப்போ பார்த்தாலும் ஏன் மேடம் படம் பண்ணல, ஏன் மேடம் நடிக்கல எப்போ பார்த்தாலும் இதே கேள்வியை கேட்குறீங்க, யார் நடிக்கலனு சொன்னா, நான் தொடர்ந்து நடித்துக்கொண்டு தான் இருக்கிறேன். நடிச்ச படத்தை ரிலீஸ் பண்ணாதானே தெரியும், படத்தை ரிலீஸ் பண்ண தியேட்டர் கொடுக்க சொல்லுங்க.

aval peyar tamilarasi mano chitra interview

அது என்ன சின்ன படம்: சின்ன படம், பெரிய படம் இப்படி எல்லாம் இல்ல, எல்லாம் படம் தான். ஆனால், சிலர் அப்படித்தான் பேசிக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்காங்க, இதனால், படம் வெளியே வரல, இதுல நான் என்ன பண்ண முடியும், நான் போயா தியேட்டரில் ரிலீஸ் பண்ண முடியுமா. சின்ன படம் பண்ண அது உப்புமா படம், பெரிய படம் பண்ணா அது பொங்கல் படமாக, இனி இந்த கேள்வியை யாருமே நடிகர்களைப் பார்த்து கேட்காதீர்கள் என்று கோவத்துடன் பேசினார் நடிகை மனோசித்ரா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X