»   »  இந்தி கஜினியில் ஆயிஷா!

இந்தி கஜினியில் ஆயிஷா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கஜினியின் இந்திப் பதிப்பில் ஆசின் நடித்த கேரக்டரில் ஆயிஷா தாக்கியாவும், நயனதாரா ரோலில் பிரியங்காசோப்ராவும் திறமை காட்டவுள்ளனர்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யாவின் மிரட்டல் நடிப்பில் வெளியான கஜினி படு ஓட்டம் ஓடியது.சூர்யாவின் நடிப்பு, ஆசினின் அடடே நடிப்பு, மிரட்டல் இசை, கலக்கல் இயக்கம் என ஒட்டுமொத்த கஜினியும்ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது.

இப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு அங்கும் மெகா ஹிட் படமாக வசூலை வாரிக் குவித்தது.

கஜினியைப் பற்றிக் கேள்விப்பட்டு, படத்தைப் பார்த்து அசந்து போன அமீர்கான் இப்படத்தை இந்தியில்தயாரிக்க முடிவு செய்து முருகதாஸையே இப்படத்தையும் இயக்கக் கோரியுள்ளார்.

இடையில் சிரஞ்சீவியை வைத்து ஸ்டாலின் படத்தை இயக்கி வந்ததால் அதை முடித்து விட்டு இந்தி கஜினிக்குவருவதாக கூறியிருந்தார். அதன்படி இப்போது ஸ்டாலினை முடித்து விட்டு ஓய்வாக இருப்பதால், இந்திகஜினிக்கு தாவியுள்ளார் முருகதாஸ்.

இந்திப் பதிப்பிலும் ஆசினே நடிப்பார் எனக் கூறப்பட்டது. ஆனால் ஆசின் கிடையாது என்று கூறப்பட்டுவிட்டதால் அவர் அப்செட் ஆகியுள்ளார்.

ஆசின் கேரக்டரில் இப்போது ஆயிஷா தாக்கியா நடிக்கிறார். நயனதாரா நடித்த கேரக்டரில் பிரியங்கா சோப்ராநடிக்கவுள்ளார்.

தனது எல்லா படங்களுக்கு சென்னையில் வைத்துப் பூஜை செய்வதே முருகதாஸின் சென்டிமென்ட் பழக்கம்.ஸ்டாலின் படத்தையும் சென்னையில் வைத்துத்தான் பூஜை போட்டார். முருகதாஸுக்காக சிரஞ்சீவியும்சென்னைக்கே வந்தார்.

அதேபோல இந்தி கஜினியின் ஷூட்டிங்கையும் சென்னையில்தான் தொடங்குகிறார் முருகதாஸ். இந்திப்படத்திற்கும் கஜினி என்ற பெயரையே சூட்ட அமீர்கான் விருப்பம் தெரிவித்துள்ளாராம்.

பட பூஜை சென்னையில் ஏப்ரல் மாதம் நடக்கிறது. தமிழில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார். இந்தியில்ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரவி கே.சந்திரன் கேமராவைக் கையாளுகிறார். கனல் கண்ணன் சண்டைப்பயிற்சியைப் பார்க்கவுள்ளார்.

இப்படத்தில் ஒரு வித்தியாசமான காட்சியையும் புதிதாக சேர்த்துள்ளார் முருகதாஸ். அதாவது படத்தின் ஒருகாட்சியில் அமீர்கான் தமிழில் வசனம் பேசி நடிக்கிறாராம். அவரே பேசவுள்ளாராம். இதற்காக நீளமானவசனத்தை எழுதிக் கொடுக்குமாறு அமீர் கான் முருகதாஸிடம் கோரிக்கை வைத்துள்ளாராம்.

தமிழை விட படு பிரமாண்டமாக உருவாகவுள்ள கஜினி இந்தி ரசிகர்களிடையே இப்போதே எதிர்பார்ப்புஅலைகளை ஏகத்துக்கும் உருவாக்கி விட்டது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil